Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர் வீரர் போட்ட சீக்ரெட் பிளான்.. செய்து முடித்த சிராஜ்.. இந்தியா வெற்றியின் பின்னணி

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அதற்கு பும்ரா எந்த அளவுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்ற தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

இந்தப் போட்டி நடந்த கேப் டவுன் மைதானத்தின் பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பது போட்டிக்கு முன்பே இரு அணிகளும் அறிந்த விஷயம் தான். அதற்கேற்ப பும்ரா உள்ளிட்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களை தயார்படுத்தி இருந்தனர்.

Indian National Cricket Team : Jasprit Bumrah leads Indian bowling unit in Cape Town test

ஆனால், அதே சமயம் பேட்டிங் செய்யவும் ஒத்துழைக்கும் என கருதிய தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரை பும்ரா வீசிய போதே தன் அனுபவத்தின் மூலம் பிட்ச்சின் தன்மை குறித்து அறிந்து கொண்டார். அதை அடுத்த ஓவர் வீசிய முகமது சிராஜ்-இடம் கூறி, பந்தை எங்கு பிட்ச் செய்ய வேண்டும், எந்த லைனில் வீச வேண்டும் என யோசனைகளை கூறி இருக்கிறார்.

மேலும், இரண்டு பக்கமும் பந்து வீச வேண்டிய நிலையில் பும்ரா வீசிய பக்கம் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகவில்லை. ஆனால், மறுபுறம் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனது. பும்ரா விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன் கொடுக்காமல் அழுத்தம் கொடுத்தால் மறுமுனையில் சிராஜ் விக்கெட்களை வீழ்த்துவார் என திட்டமிட்டு செயல்பட்டார்.

அதன்படி முதல் இன்னிங்க்ஸில் முகமது சிராஜ் 6 விக்கெட்கள் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். முகேஷ் குமாரும் பும்ரா யோசனைகளை செயல்படுத்தினார். முதல் இன்னிங்க்ஸில் அவர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

அடுத்து தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது முகேஷ் குமார் பவுன்ஸ் ஆகும் முனையில் இருந்து பந்து வீசி 2 விக்கெட்களை எடுத்தார். ஆனால், சிராஜ் இந்த முறை இரண்டு பக்கம் இருந்தும் பந்து வீசியும் அவரால் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது.

எனவே, பும்ரா பவுன்ஸ் ஆகும் திசையில் இருந்து பந்து வீசி 6 விக்கெட்களை அள்ளினார். தென்னாப்பிரிக்கா 176 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்திய அணிக்கு 79 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதால் இந்தியா எளிதாக வென்றது. இந்த வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என்றாலும், அதில் அந்த குழுவின் தலைவராக செயல்பட்ட பும்ராதான் முக்கிய காரணம்.

Story first published: Friday, January 5, 2024, 23:47 [IST]
Other articles published on Jan 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+