Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. கே எல் ராகுல் இடத்துக்கே ஆப்பு வைத்த புதிய வீரர்.. 2 மேட்ச்சில் எல்லாமே மாறியது

மும்பை : இந்திய டி20 அணியில் புதிதாக இடம் பெற்ற ஜிதேஷ் சர்மா தன் திறமையால், அணியின் மூத்த வீரரான கே எல் ராகுல் இடத்தை பறிப்பார் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கும் இப்படி ஒருவர் போட்டியாக வருவார் என எதிர்பார்க்காத சமயத்தில் வந்து கலக்கி இருக்கிறார் ஜிதேஷ் சர்மா. விக்கெட் கீப்பர்களான கே எல் ராகுல், இஷான் கிஷன் என பலருக்கும் இவரால் சிக்கல் ஏற்படப் போகிறது.

கே எல் ராகுல் 2023 உலகக்கோப்பை தொடர் மற்றும் ஆசிய கோப்பைக்கு முன்னதாக காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டி ஓய்வில் இருந்தார். அணிக்கு திரும்பிய பின் அவர் இதுவரை ஒருநாள் அணியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

Indian National Cricket Team : Jitesh Sharma will replace KL Rahul in Indian T20 team

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் உலகக்கோப்பையில் ஆடிய பல வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. கே எல் ராகுலுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்து இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயார் ஆக வேண்டும் என்பதால் இளம் வீரர்கள் பலருக்கு தங்களை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். கடைசி இரண்டு போட்டிகளில் ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இஷான் கிஷன் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இரண்டு அரைசதம் அடித்து தன்னை நிரூபித்தார். ஜிதேஷ் சர்மா ஃபினிஷராக இரண்டு போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி 35 மற்றும் 24 ரன்களை 160 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து தன்னை நிரூபித்தார்.

ஆனால், தற்போது டி20 அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி இருப்பதால் அவர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக ஆட உள்ளார். இந்த நிலையில், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைப்பது கேள்விக் குறியாகி உள்ளது. அதனால், ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

தற்போது ஜிதேஷ் சர்மாவுக்கு போட்டியாக இந்திய அணியில் உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்று பார்த்தால் கே எல் ராகுல் மட்டுமே. ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து மீண்டு ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்தாலும் அவர் நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு குறைவு.

இந்த நிலையில், டி20 போட்டிக்கு ஏற்ற ஸ்ட்ரைக் ரேட் ஜிதேஷ் சர்மாவிடம் உள்ளது. கே எல் ராகுல் மிடில் ஆர்டரில் தான் இறங்குவார். அவர் ஃபினிஷர் கிடையாது என்பதால் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. அது மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கில் மிக வேகமாக செயல்படுகிறார் ஜிதேஷ். அதுவும் அவருக்கு சாதகமான விஷயமாக உள்ளது.

Story first published: Monday, December 4, 2023, 19:51 [IST]
Other articles published on Dec 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+