Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமியின் அந்த வித்தை.. சொல்லிக் கொடுத்த பாகிஸ்தான் ஜாம்பவான்.. பேட்ஸ்மேன்களை கலங்க வைக்கும் ட்ரிக்

கொல்கத்தா : முகமது ஷமி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலான வேகப் பந்துவீச்சாளராக வலம் வருகிறார். அதற்காக அவர் குறிப்பிட்ட ஒரு பவுலிங் வித்தையை பயன்படுத்துகிறார்.

அந்த வித்தையை கற்றுக் கொடுத்ததே பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் தான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வாசிம் அக்ரம் சில ஆண்டுகள் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். அப்போது முகமது ஷமிக்கு அவர் சில வேகப் பந்துவீச்சு நுட்பங்களை கற்றுத் தந்தார்.

முகமது ஷமி 2013 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றார். அப்போது அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கவில்லை. ஆனால், வாசிம் அக்ரம் போன்ற ஒரு ஜாம்பவான் அருகே இருக்கும் போது அதை வீணாக்க விரும்பாத ஷமி, அவரிடம் தன் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.

Indian National Cricket Team : Mohammed Shami learned a bowling trick from Wasim Akram

ஷமிக்கு இயல்பாகவே பந்து வீசும் போது மணிக்கட்டு செயல்பாடு அபாரமாக இருக்கும். ஆனால், பந்தை அவர் எந்த விரல்களால் பிடித்து வீசுகிறார் என்பதில் தான் வாசிம் அக்ரம் சில மாற்றங்களை செய்தார். அதன் மூலம், ஷமி பந்து வீச ஓடி வரும் போது பந்தை பிடித்து இருப்பது ஒரு மாதிரி இருக்கும். ஆனால், அவர் பந்தை வீசும் போது அதை மாற்றி வேறு மாதிரியாக வீசுவார்.

அதனால், பேட்ஸ்மேன்களால் ஷமி இன்ஸ்விங் வீசப் போகிறாரா? அவுட்ஸ்விங் வீசப் போகிறாரா? என தெரியாமல் திணறுவார்கள். இதுவே அவர் தொடர்ந்து விக்கெட் வீழ்த்தும் ரகசியம். வாசிம் அக்ரம் அந்த நுட்பத்தின் அடிப்படையை சொல்லிக் கொடுத்தாலும் முகமது ஷமி பல ஆண்டுகளாக தொடர்ந்து பயிற்சி செய்து அதை மெருகேற்றி இருக்கிறார். இன்னும் லைன், லென்த் ஆகியவற்றிலும் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறார்.

வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவானை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஷமி. அதை அப்படியே விட்டுவிடாமல் பயிற்சியால் பல மடங்கு தாக்கத்தை ஏற்படுத்த கற்றுக் கொண்டு இருக்கிறார். இதுவே அவரது வெற்றிக்கான காரணம்.

Story first published: Sunday, December 3, 2023, 14:13 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+