Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் சர்மாவுக்கு கம்பீர் வைத்த ஆப்பு.. பயிற்சியாளர் பொறுப்பு வருவதற்கு முன்பே வில்லங்கம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வரப் போகிறார் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது. இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கம்பீர் இன்று மும்பை சென்று இருக்கிறார்.

அங்கு பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியில் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் தாம் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டால் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து தனது திட்டத்தை பிசிசிஐ அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறார்.

t20 world cup indian national cricket team cricket 20 2024

இதில் தாம் பயிற்சியாளராக வரவேண்டும் என்றால் தமது திட்டத்திற்கு பிசிசிஐ ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதில் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரூட்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என்ற செய்தி நேற்று வெளியான நிலையில் தற்போது கம்பீரின் இரண்டாவது திட்டம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

அதில் இனி இந்திய அணிக்கு இரண்டு அல்லது மூன்று அணிகளை தனியாக உருவாக்க வேண்டும் என்று கம்பீர் தெரிவித்திருக்கிறார். அதன்படி டி20 என ஒரு அணியும், ஒரு நாள் போட்டிக்கு என ஒரு அணியும், டெஸ்ட் போட்டிகளுக்கு என தனி அணியையும் தயார் செய்ய வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்தி இருக்கிறார். இதன் மூலம் வாய்ப்புக்காக காத்திருக்கும் பெரும்பாலான வீரர்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்பது நல்ல விஷயமாகும்.

மேலும் ஒரே வீரர்கள் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அமர்ந்து கொண்டு சொதப்புவது தடுக்கப்படும். குறிப்பாக விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற ஸ்டார் வீரர்கள் தற்போது மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கிறார்கள். இதனை காரணம் காட்டி தாங்கள் தொடர்ந்து விளையாடுகிறோம்.

இதனால் எங்களுக்கு ஓய்வு வேண்டும் என சில டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி விடுகிறார்கள்.இதனை தடுக்க டெஸ்ட் போட்டிக்கு நிச்சயம் தனி வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என கம்பீர் வலியுறுத்தி இருக்கிறார். கம்பீரின் முயற்சி நிச்சயம் வரவேற்கத்தக்கது என்றாலும் அது விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு வைக்கப்படும் ஆப்பாக தான் கருதப்படுகிறது.

Story first published: Tuesday, June 18, 2024, 17:56 [IST]
Other articles published on Jun 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+