Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா மாதிரியெல்லாம் என்னால் இருக்க முடியாது.. பொறாமையில் பொங்கிய அஸ்வின்.. என்ன சொன்னார்?

சென்னை : ரவீந்திர ஜடேஜாவை பார்த்து எனக்கு பொறாமையாக இருக்கிறது எனக் கூறி அதிர வைத்து இருக்கிறார் அஸ்வின்.

இந்திய அணியில் நீண்ட காலமாக இரட்டை ஸ்பின்னர்களாக கலக்கி வருபவர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா. ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அஸ்வினுக்கு இடம் இல்லை. ஆனால், ஜடேஜா மூன்று அணிகளிலும் நீண்ட காலமாக இடம் பெற்று வருகிறார்.

அஸ்வின் டெஸ்ட் அணியில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் நம்பர் 1 ஆல் - ரவுண்டராக இருக்கிறார். அஸ்வினை விட பேட்டிங்கில் ஜடேஜா ஒரளவு முன்னிலையில் இருக்கிறார். உலகின் சிறந்த பீல்டர் என்ற பெயரையும் பெற்று இருக்கிறார் ஜடேஜா.. ஆனால், அஸ்வின் சராசரியான பீல்டர் தான்.

Indian National Cricket Team : Ravichandran Ashwin shares his thoughts about Ravindra Jadeja

இது பற்றி பேசிய அஸ்வின், ஜடேஜவைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது. அவர் களத்தில் வேகமாக செயல்படுகிறார். என்னால் அது போல செயல்பட முடியவில்லை. ஆனால், அஸ்வின் இல்லாமல் ஜடேஜா இல்லை. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் இல்லை. ஜடேஜா மிகவும் எளிமையாக சிந்திப்பவர். ஆனால், நான் அதிகம் சிந்திப்பேன், அதிக கேள்விகளை கேட்பேன். இது தான் எங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்றார்.

இது பற்றி ஒரு பேட்டியில் அஸ்வின் பேசுகையில், "ரவீந்திர ஜடேஜாவை பார்த்து தான் நான் பொறாமைப்படுகிறேன். ஜடேஜாவின் பயணமும் என்னுடைய பயணமும் மிகவும் மாறுபட்டவை. ஜடேஜா நாள்தோறும் ஒரே இடத்தில் ஒரு பந்தைப் போடுவார். களத்தில் மிகவும் வேகமாக இருப்பார். பேட்டிங்கில் மிகவும் எளிமையாக இருப்பார். பெரும்பாலான நாட்களில் அபாரமாக செயல்படுவார். என்னால் அதைச் செய்ய முடியாது." என்றார்.

மேலும், "சில காரணங்களால், நீண்ட காலமாக, என்னால் இதை அவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் சமீபத்தில் அதற்கான வழியைக் கண்டுபிடித்தேன். மற்றவரை விட யார் சிறந்தவர் என்பது குறித்தும் எங்களுக்கு இடையே தொடர்ந்து சண்டை உள்ளது. ஜடேஜா இல்லாமல் அஸ்வின் இல்லை. அஸ்வின் இல்லாமல் ஜடேஜா இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், அவர் எளிமையாக இருப்பார். மிகவும் திறமையானவர். அதிகமாக சிந்திக்கவோ அல்லது ஆர்வமாகவோ இருக்க மாட்டார். ஆனால், நான் அதிகமாக சிந்திப்பேன். கேள்விகள் கேட்பேன்" என்றார் அஸ்வின்.

Story first published: Sunday, December 3, 2023, 0:56 [IST]
Other articles published on Dec 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+