Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பி இது கூட தெரியலையா.. சுப்மன் கில்-இன் வீக்னஸ்.. உண்மையை போட்டு உடைத்த சுனில் கவாஸ்கர்

மும்பை : இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படும் சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான பேட்டிங் சராசரி வைத்துள்ளார். அஸ்வினை விட பேட்டிங்கில் மிகவும் பின்தங்கி இருக்கிறார் சுப்மன் கில்.

ஆனால், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார். 2023ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டியில் 26 இன்னிங்க்ஸ்களில் அவரது பேட்டிங் சராசரி 63.36 ஆக உள்ளது. ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்க்ஸில் அவரது பேட்டிங் சராசரி 28.66 மட்டுமே.

indian-national-cricket-team-reason-behind-shubman-gill-not-playing-well-in-test-matches-explained

இதுவரை 35 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் சுப்மன் கில் 994 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அஸ்வின் தன் முதல் 35 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 1004 ரன்கள் குவித்து இருந்தது குறிபிடத்தக்கது. அந்த வகையில் பந்துவீச்சாளர் அஸ்வினின் பேட்டிங்கை விட மோசமாக ஆடி வருகிறார் சுப்மன் கில்.

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 2 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார் சுப்மன் கில். இந்த நிலையில், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சுப்மன் கில் டெஸ்ட் போட்டியில் ஏன் ரன் குவிக்கவில்லை என்ற உண்மையை விளக்கி இருக்கிறார்.

"சுப்மன் கில் டி20, ஒருநாள் போட்டிகளை போன்றே, டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடி ஆட்டம் ஆட நினைக்கிறார். ஆனால், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அது பந்து தான். குறைந்த ஓவர் போட்டிகளில் வெள்ளைப் பந்து பயன்படுத்தப்படும், டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும். சிவப்பு நிற பந்து சற்று அதிகமாக பவுன்ஸ் ஆகும். அதை சுப்மன் கில் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார் கவாஸ்கர்.

மேலும், "சுப்மன் கில் தன் கேரியரை ஆரம்பித்த போது நாம் அனைவரும் அவரின் ஷாட் ஆடும் திறனை பாராட்டி இருக்கிறோம். அவர் ஃபார்முக்கு திரும்புவார் என நாம் நம்பிக்கையுடன் இருப்பதை தவிர வேறு வழியில்லை. எதிர்காலத்தில் அவர் பயிற்சி பெற்று நன்றாக ஆடுவார் என நம்புகிறேன்" என்றார் கவாஸ்கர்.

Story first published: Sunday, December 31, 2023, 17:09 [IST]
Other articles published on Dec 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+