For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

146 வருட கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறை.. விராட் கோலி இமாலய சாதனை.. சச்சின் ரெக்கார்டும் காலி

செஞ்சுரியன் : விராட் கோலி, 146 கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை செய்து மிரள வைத்து இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த போதும், விராட் கோலி முதல் இன்னிங்க்ஸில் 38 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 76 ரன்களும் சேர்த்தார்.

Indian National Cricket Team : Virat Kohli did a new record in 146 years old cricket history

இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்தார். ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என இரண்டிலும் சேர்த்து விராட் கோலி இந்த ஆண்டு 2048 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1377 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 671 ரன்களும் சேர்த்துள்ளார்.

விராட் கோலி ஏழாவது முறையாக ஒரே ஆண்டில் 2000 சர்வதேச ரன்களை குவித்து இருக்கிறார். அதிகாரப்பூர்வ கிரிக்கெட் போட்டிகள் துவங்கிய 1877ஆம் ஆண்டு முதல் சுமார் 146 ஆண்டுகளில் எந்த வீரரும் ஏழு முறை ஒரே ஆண்டில் 2000 ரன்களை கடந்ததில்லை.

விராட் கோலி எந்தெந்த ஆண்டுகளில் 2000 ரன்களை கடந்து இருக்கிறார்?

2012 - 2186 ரன்கள்
2014 - 2286 ரன்கள்
2016 - 2595 ரன்கள்
2017 - 2818 ரன்கள்
2018 - 2735 ரன்கள்
2019 - 2455 ரன்கள்
2023 - 2048 ரன்கள்

முன்பு குமார் சங்ககாரா ஆறு முறை ஒரே ஆண்டில் 2000 ரன்களை குவித்து இருந்தார். அந்த சாதனையை 2019-லேயே சமன் செய்து இருந்த விராட் கோலி, தற்போது அதை முறியடித்து இருக்கிறார்.

இதைத் தவிர தென்னாப்பிரிக்க மண்ணில் அனைத்து விட கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி.

தென்னாப்பிரிக்க மண்ணில் சச்சின் 38 போட்டிகளில் 1724 ரன்கள் குவித்து இருக்கும் நிலையில், விராட் கோலி 29 போட்டிகளில் 1750 ரன்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மனை முந்தி 21 ஆம் இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விவிஎஸ் லக்ஷ்மன் 8781 ரன்கள் குவித்துள்ள நிலையில், விராட் கோலி தற்போது 8790 ரன்கள் குவித்து இருக்கிறார்.

Story first published: Friday, December 29, 2023, 9:46 [IST]
Other articles published on Dec 29, 2023
English summary
Indian National Cricket Team : Virat Kohli did a new record in 146 years old cricket history
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+