Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் இனி நம்பர் 3.. கோலிக்கு ஆப்பு வைக்க இறக்கப்பட்ட வீரர்.. மும்பை லாபியின் மாஸ்டர் பிளான்?

மும்பை : விராட் கோலியின் பேட்டிங் இறங்கும் நம்பர் 3 இடத்தில் வேறு ஒரு வீரரை இறக்க முதல்கட்ட வேலை நடந்து வருவதாக கோலி ரசிகர்கள் புகார் கூறி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட்டில் மும்பை லாபியின் ஆதிக்கம் குறித்து பேசப்படும் நிலையில், விராட் கோலியை டி20 அணியில் இருந்து நீக்க மும்பை வீரர் ஒருவரை தயார் செய்து வருவதாக விராட் கோலி ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய டி20 அணியை தயார் செய்யும் பணியில் தீவிரமாக உள்ளது பிசிசிஐ. அதற்கான அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இடம் உண்டா என்பதே தெரியவில்லை. காரணம், கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இதுவரை நடந்த டி20 தொடர்கள் எதிலும் அவர்கள் இருவரும் பங்கேற்கவில்லை.

INDIAN NATIONAL CRICKET TEAM : Virat Kohli may lose his spot to Shreyas Iyer in T20 team

இந்த நிலையில், ரோஹித் சர்மா தான் 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ வட்டாரத்தில் தகவல் கசிந்தது. ஆனால், விராட் கோலியை அணியில் சேர்க்க முடியாது எனவும், அதைப் பற்றி அவரிடம் பேசப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், இதெல்லாம் கட்டுக் கதைகளாகவே இருக்கும் என நினைத்த விராட் கோலி ரசிகர்களுக்கு இடியாக வந்துள்ளது அடுத்த தகவல். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்காக முதல் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து இருந்த இஷான் கிஷனை அணியில் இருந்தே நீக்கினார்கள்.

ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். டி20 அணியில் மூன்றாம் வரிசையில் ஆடுபவர்கள் நங்கூரம் போட்டு நின்று ஆடை வேண்டும். அந்த பணியை விராட் கோலி இதற்கு முன் சிறப்பாக செய்து வந்தார். தற்போது அதே போல ஒருநாள் அணியில் ஆடும் ஸ்ரேயாஸ் ஐயரை டி20 அணியில் இறக்கியது பிசிசிஐ.

ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த நிலையில் அவரை டி20 அணியில் நிரந்தர மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக ஆட வைக்க அடுத்த கட்ட காய்நகர்த்தல் நடந்து வருகிறது. இதை மும்பை லாபியே செய்வதாக விராட் கோலி ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்

Story first published: Tuesday, December 5, 2023, 21:44 [IST]
Other articles published on Dec 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+