Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு மேல முடியாது.. கோலியை டீமை விட்டே அனுப்ப பிசிசிஐ முடிவு.. உலகக்கோப்பை ஸ்ட்ரைக் ரேட்டால் அதிருப்தி

மும்பை : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் மூத்த வீரருமான விராட் கோலியை டி20 அணியில் இருந்து நிரந்தரமாக நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உலகக்கோப்பைக்கு பின் நடந்த கூட்டத்தில் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் முன்னிலையில் இந்த முடிவை பிசிசிஐ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இன்னும் ஆறு மாதங்களில் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

அதற்கான அணித் தேர்வில் பிசிசிஐ தீவிரமாக இறங்கி உள்ளது. முதற்கட்டமாக டி20 அணியின் கேப்டன் யார் என்ற முடிவை எடுத்துள்ளது. ஓராண்டாக நடைபெற்ற பல்வேறு டி20 தொடர்களில் பல வீரர்களை கேப்டன்களாக நியமித்து இருந்தது பிசிசிஐ. ஆனால், யாரும் சரிவராத நிலையில், மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.

INDIAN NATIONAL CRICKET TEAM : Virat Kohli strike rate is low for T20 matches

ரோஹித் சர்மா டி20 அணிக்கு திரும்ப இருப்பதால் அவருடன் விராட் கோலியும் அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிய நிலையில் அதிரடியாக விராட் கோலியை அணியில் இருந்தே நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்த வீரர் விராட் கோலி தான்.

ஆனால், டி20 போட்டிக்கு ஸ்ட்ரைக் ரேட் தான் தேவை என காரணம் கூறி விராட் கோலியை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்தார். ஆனால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 90 ஆக இருந்தது. அதே தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் அனைவரும் 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தனர்.

விராட் கோலி மட்டுமே குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பதை சுட்டிக் காட்டி அவரை டி20 அணியில் இருந்து நீக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோரும் நீண்ட காலமாக டி20 அணியில் இடம் பெறாத போதும் அவர்கள் நேரடியாக 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற இருக்கிறார்கள்.

அதே 2023 உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் தன்னை விக்கெட் இழக்காமல் நிதான ஆட்டம் ஆடுமாறு கேட்டுக் கொண்டதால் நிதானமாக ஆடினேன் என 49வது சதம் அடித்த பின் கோலி பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. அணி நிர்வாகமே நிதான ஆட்டம் ஆடுமாறு கூறி விட்டு, பின் பிசிசிஐ அதை காரணம் காட்டி நீக்க உள்ளதாக கூறப்படுவது விவாதத்துக்கு உரிய விஷயமாக மாறி உள்ளது.

Story first published: Thursday, December 7, 2023, 16:48 [IST]
Other articles published on Dec 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+