
மாற்றம் அவசியம்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தியா. அதற்கு இந்திய அணி துவக்க வீரர்களில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

ராகுல் - விஜய் நிலை
ராகுல் கடந்த 23 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 11 ஒற்றை இலக்க ரன்களை எடுத்துள்ளார். இந்த 23 வாய்ப்புகளில் மொத்தமாக 475 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 21.59 மட்டுமே. இதில் ஒரே ஒரு சதம் மற்றும் அரைசதம் அடங்கும். முரளி விஜய் இங்கிலாந்து தொடரில் சரியாக ஆடாவிட்டாலும், அடுத்து கவுன்டி மற்றும் பயிற்சிப் போட்டிகளில் ஓரளவு நன்றாக ஆடினார்.

மாயங்க் அகர்வால் உள்ளே
காயத்தில் இருந்த ப்ரித்வி ஷா மூன்றாம் டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என கூறப்பட்ட நிலையில், அவர் காயம் குணமாகவில்லை. அதனால் தற்காலிகமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மாயங்க் அகர்வால் அணியில் இணைந்துள்ளார்.

முரளி விஜய் - மாயங்க் அகர்வால்
மூன்றாவது டெஸ்டில் முரளி விஜய் - மாயங்க் அகர்வால் களம் இறங்கினால் சரியாக இருக்கும் என பலரும் கருத்து கூறி வருகின்றனர். மாயங்க் அகர்வால் உள்ளூர் தொடர்களில் எராளமாக ரன் குவித்து நல்ல பார்மில் இருக்கிறார். நீண்ட காலமாக இந்திய அணியில் வாய்ப்பின்றி காத்துக் கொண்டு இருக்கிறார்.

ரோஹித் - துவக்க வீரர்?
ஒரு வேளை முரளி விஜய்யும் சரியாக ஆடாததால் அணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், மாயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மாவை துவக்கத்தில் களம் இறக்கலாம். ரோஹித் சர்மா மிடில் ஆர்டரை விட துவக்க வீரராக வருவதே அவருக்கு ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











