இப்படிலாமா நடக்கும்? உமேஷ் யாதவ் முதுகில் குத்திய நண்பன்.. கூடவே இருந்து குழி பறித்தார்
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவை அவரது நண்பரே 44 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகளையும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களையும் இந்தியாவுக்காக வீழ்த்திருக்கிறார்.

முதுகில் குத்திய நண்பன்
35 வயது வீரரான உமேஷ் யாதவ் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக தற்போது விளங்கி வருகிறார்.அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடுவதற்காக தற்போது உமேஷ் யாதவ் பயிற்சி ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் உமேஷ் யாதவ் நண்பரும் அவருடைய மேலாளருமான தாக்கரே அவரது முதுகில் குத்திய சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மோசடி
உமேஷ் யாதவ் சொந்த ஊரான நாக்பூரில் ஒரு நிலத்தை வாங்க தனது மேலாளர் தாக்ரேவிடம் 44 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். உமேஷ் யாதவின் அனைத்து விவகாரங்களையும் தாக்ரே தான் பார்த்து வந்துள்ளார். உமேஷ் யாதவின் வருமானவரி தாக்கல் செய்யும் பொறுப்பு கூட தாக்ரேவிடம் தான் உள்ளது.

44 லட்சம் ரூபாய்
உமேஷ் யாதவிடம் நீண்ட நாட்களாக பழகி அவருடைய நம்பிக்கையை பெற்ற தாக்ரே, நிலத்தை வாங்கி விட்டு அதனை தன்னுடைய பெயருக்கு பதிவு செய்திருக்கிறார். இந்த செய்தி குறித்து அறிந்த உமேஷ் யாதவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். நிலத்தை மீண்டும் தனது பெயருக்கு எழுதிக் கொடுத்து விடு என்று உமேஷ் யாதவ் தனது மேலாளரிடம் கேட்டுள்ளார்.

வழக்குப் பதிவு
ஆனால் இது தான் சம்பாதித்து வாங்கிய நிலம் என்று தாக்ரே கூறியிருக்கிறார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் தாக்ரே மீது புகார் அளித்திருக்கிறார். இதனை விசாரித்துள்ள போலீசார் தாக்ரே மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சொந்த நண்பனே உமேஷ் யாதவை ஏமாற்றி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications