Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட, போங்கப்பா.. நான் மறுபடியும் படிக்கப் போறேன்.. புக்குடன் கிளம்பிய ஆர்.பி. சிங்

லக்னோ: இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று காத்திருந்து பெரும் ஏமாற்றமே மிஞ்சிய நிலையில் வேகப் பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்வதற்காக படிக்கக் கிளம்பி விட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நேரத்தில் படு பிசியாக இருந்தவர் ஆர்.பி.சிங். இதற்காக தனது கல்லூரிப் படிப்பைக் கூட அவர் நிறுத்தி விட்டார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஆர்.பி. சிஙற் 2008ம் ஆண்டு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்திய அணியில் பிசியாக இருந்து வந்தார்.

ஆனால் தற்போது அவருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு சுத்தமாக மங்கிப் போய் விட்டது. இதனால் மீண்டும் படிக்க கிளம்பியுள்ளார்.

ஆசிரியர்களுடன் சந்திப்பு

ஆசிரியர்களுடன் சந்திப்பு

லக்னோ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்குப் போன ஆர்.பி. சிங் அங்கு ஆசிரியர்களைச் சந்தித்து தனது பட்டப்படிப்பை முடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறி ஆலோசனை கேட்டார்.

அரசியல் அறிவியல்

அரசியல் அறிவியல்

3வது ஆண்டு அரசியல் அறிவியல் படித்து வந்தவர் ஆர்.பி. சிங் என்பது நினைவிருக்கலாம்.

வி.சி.யுடன் பேசி ஆவண செய்வதாக உறுதி

வி.சி.யுடன் பேசி ஆவண செய்வதாக உறுதி

ஆர்.பி.சிங்கிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் நீரஜ் ஜெயின், இதுகுறித்து துணைவேந்தர் எஸ்.பி. நிம்சேயுடன் பேசி ஆவண செய்வதாக சிங்குக்கு உறுதி அளித்தாராம்.

ஸ்பெஷல் கேஸ்

ஸ்பெஷல் கேஸ்

இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ஆர்.பி.சிங்கை சிறப்பு விவகாரமாக கருதி இதில் ஆவண செய்ய முயல்வோம். அவர் தனது படிப்பை முடிக்க தேவையானவற்றை நிச்சயம் ஆசிரியர் சங்கம் செய்யும் என்றார்.

அரசியலுக்கு வரலாமே

அரசியலுக்கு வரலாமே

பேசாமல் படித்து முடித்து விட்டு அரசியலுக்குப் போய் விடுங்கள் ஆர்.பி. சிங்.. அங்குதான் யாரும் நம்மை நீக்கவேை முடியாது. அப்படியே ஒரு கட்சியில் நீக்கினாலும், இன்னொரு கட்சிக்குத் தாவி விடலாம்.

Story first published: Sunday, February 23, 2014, 12:12 [IST]
Other articles published on Feb 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+