Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

45% ஸ்டெம்ப் தான் டார்கெட்.. இந்திய அணியின் "சரவெடி" பிளான்.. ஃபிளாட் பிட்சில் "கதகளி" ஆட்டம்

லண்டன்: நான்காவது டெஸ்ட் போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் வியூகம் உண்மையில் வாவ் சொல்ல வைக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது

நேற்று நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் வெற்றியை நோக்கி போராடி வருகின்றன.

சுளீர் வெயில்

சுளீர் வெயில்

இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஹஸீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ் இவ்வளவு தூரம் Roar (கர்ஜனை) செய்ததன் காரணம், பிட்ச் இப்போது பேட்டிங்குக்கு ஏதுவாக உருமாறி இருப்பதனால் தான். கடைசி இரண்டு நாட்களாக நன்றாக வெயில் அடிக்கிறது. அதுவும் சுளீரென! பிட்ச் ஃபிளாட்டாக உள்ளது. இதனால், பந்துகளை ஈஸியாக க்ளீயர் செய்ய முடிகிறது. போதாத குறைக்கு ஷமி, இஷாந்த் போன்ற அனுபவம் வாய்ந்த பவுலர்களும் இல்லை. நேற்று விராட் கோலி எவ்வளவோ முயன்றும், ஜடேஜாவை வைத்து எவ்வளவோ போராடியும் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.

55% பந்துகள் வெளியே

55% பந்துகள் வெளியே

இந்த நிலையில், இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய பிறகு, இந்தியாவின் வியூகம் என்னவென்று நமக்கு ஓரளவு புரிகிறது. போட்டி தொடங்கிய அரைமணி நேரத்தில், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹஸீப் ஹமீதுக்கு வீசப்பட்ட பந்துகளில் 45 சதவிகித பந்துகள் ஸ்டெம்ப்புகளை நோக்கி வீசப்பட்டுள்ளன. 55 சதவிகிதம் பந்துகள் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியேவோ, லெக் ஸ்டெம்புக்கு வெளியேவோ வீசப்பட்டுள்ளன. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஸ்டெம்ப்புகளை டார்கெட் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் வியூகமாக இருக்கலாம். காரணம், லண்டன் ஓவலில் இந்த நிமிடம் மேகமூட்டங்கள் இல்லை. அசைந்தாடும் காற்று இல்லை. நாம் முன்பே சொன்னது போல், வெயில் வெளுக்கிறது. இதனால், பேட்ஸ்மேன்கள் எட்ஜ் ஆகி, ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு.

அரைசதம் அடித்ததும் அவுட்

அரைசதம் அடித்ததும் அவுட்

எனவே தான் ஸ்டெம்ப்புகளை குறிவைத்து இந்திய பவுலர்கள் பந்து வீசி வருகின்றனர். இதனால், பேட்ஸ்மேன்கள் நிச்சயம் பந்தை மீட் செய்தே ஆகவேண்டும். லீவ் செய்ய முடியாது. எனவே பேட்ஸ்மேன் போல்ட் ஆவதற்கும் வாய்ப்புள்ளது, எல்பி ஆவதற்கும் வாய்ப்புள்ளது. இதுதான் முதல் இரண்டு மணி நேரத்திற்கு இந்தியாவின் வியூகமாக இருக்கும் என்று உறுதியாக கூறலாம். ஆனால், இப்போது போகிற போக்கை பார்த்தால், இங்கிலாந்து தொடக்க வீரர்களே மேட்சை முடித்துவிடுவார்கள் போல என்று நாம் நினைப்பதற்கும் ரோரி பர்ன்ஸ் அவுட்டாகி வெளியேறினார். 124 பந்துகளில் அரைசதம் அடித்த ரோரி பர்ன்ஸ், அடுத்த பந்திலேயே ஷர்துல் தாகூர் ஓவரில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தோல்வியை தவிர்ப்பது கடினம்

தோல்வியை தவிர்ப்பது கடினம்

இப்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளியே செல்லும் பந்துகளை விட்டுவிடுகின்றனர். ஸ்டெம்ப்பை நோக்கி வரும் பந்தில் பெரிய அளவுக்கு இம்பேக்ட் இல்லாததால் அழகாக மீட் செய்து க்ளீயர் செய்கின்றனர். வருண பகவான் கொஞ்சம் மனது வைத்து மேகங்களை திரட்டினால், நிச்சயம் இந்திய பவுலர்கள் கம்பேக் கொடுக்க முடியும். ஏனெனில், ஜடேஜா எனும் ஒற்றை ஸ்பின்னரை வைத்துக் கொண்டு வெற்றிப் பெறுவதும் கடினம், தோல்வியை தவிர்ப்பதும் கடினம்.

Story first published: Monday, September 6, 2021, 18:00 [IST]
Other articles published on Sep 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+