For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுல பிட்ச் மிகவும் கடுமையா இருக்கு... ஆனா இந்த சவால் பிடிச்சுருக்கு.. ஸ்டோக்ஸ் மகிழ்ச்சி!

அகமதாபாத் : இந்தியாவின் பிட்ச்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருப்பதாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இந்த சவால் விளையாட்டின் ஒரு பகுதி என்றும் இந்த சவால் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பிட்ச் குறித்த விமர்சனங்கள்

பிட்ச் குறித்த விமர்சனங்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்துள்ளன. அடுத்ததாக 2 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய பிட்ச் குறித்த விமர்சனங்கள் எழுந்தன.

பிட்ச் குறித்த கேள்வி

பிட்ச் குறித்த கேள்வி

தற்போது இந்த விமர்சனங்கள் தொடர்கின்றன. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்தில் அடுத்த இரு போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில் தற்போதே அந்த மைதானத்தில் பிட்ச்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு வீரர்களுக்கு சவால்

வெளிநாட்டு வீரர்களுக்கு சவால்

இந்நிலையில் இநதிய பிட்ச்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு மிகவும் கடுமையானதாக இருப்பதாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். டெய்லி மிரருக்காக பேசியுள்ள அவர், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சவால் பிடித்துள்ளது

சவால் பிடித்துள்ளது

ஆயினும் இந்த சூழ்நிலைகள் போட்டிகளின் ஒரு அங்கம் தான் என்றும் இந்த சவால்கள் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த போட்டியில் பௌலிங் செய்வதற்கான சூழல் இல்லாத நிலையில் அடுத்ததாக நடைபெறவுள்ள பகலிரவு போட்டியில் அதிகமாக பௌலிங் செய்து அணியின் வெற்றிக்கு உதவுவேன் என்றும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, February 22, 2021, 15:42 [IST]
Other articles published on Feb 22, 2021
English summary
Being a Test batsman is that you need to be able to handle all types of conditions -Ben stokes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+