Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா வரும் தென் ஆப்ரிக்கா அணியின் பயிற்சியாளராக இந்திய வீரர் நியமனம்..! ரசிகர்கள் ஷாக்..!!

மும்பை: தென் ஆப்ரிக்க பேட்டிங் பயிற்சியாளராக இந்திய உள்ளூர் ஜாம்பவான் அமுல் முஜும்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டுப்ளெசிஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி, உலக கோப்பையில் சொதப்பி தள்ளியது. இந்த முறையும் அந்த அணியை தோல்வி துரத்தி, துரத்தி பாடாய்படுத்தியது. விளைவு லீக் சுற்றிலேயே பெருத்த ஏமாற்றத்துடன் சொந்த ஊர் திரும்பியது.

உலக கோப்பை தோல்வியை அடுத்து தலைமை பயிற்சியாளர் கிப்சன் உட்பட பயிற்சியாளர் குழுவில் உள்ள அனைவரும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப் பட்டனர். அணியை மறு சீரமைப்பு பணியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இறங்கியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம்

இந்தியாவில் சுற்றுப்பயணம்

தென் ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 15ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது.

பயிற்சியாளர் நியமனம்

பயிற்சியாளர் நியமனம்

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் பயிற்சியாளராக இந்தியாவை சேர்ந்த அமுல் முஜும்தர் நியமிக்கப்பட்டு உள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச ரன்கள்

அதிகபட்ச ரன்கள்

மும்பையை சேர்ந்தவர் முஜும்தர். 44 வயதான அவர், 1994ம் ஆண்டு முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 171 முதல்தர போட்டிகளிலும், 113 லிஸ்ட் ஏ பிரிவு போட்டிகளிலும் ஆடியுள்ளார். அவர் 11,167 ரன்கள் குவித்துள்ளார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றவர்.

பல சாதனைகள்

பல சாதனைகள்

மும்பை அணிக்காக பல வருடங்கள் ஆடிய அவர் அவரது காலத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.

அக். டெஸ்ட்

அக். டெஸ்ட்

அக்டோபரில் இந்தியாவிற்கு எதிரான தென் ஆப்ரிக்கா அணிக்கு டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்த தொடருக்கு மட்டும் அவர் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஒப்புக்கொண்டேன்

ஒப்புக்கொண்டேன்

இதுகுறித்து முஜும்தர் கூறியதாவது: என்னை கடந்த வாரம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க அணுகினர். நானும் சரி என்று கூறிவிட்டேன். இது எனது முதல் சர்வதேச பயிற்சியாளர் வேலை. எனவே, வெற்றிகரமாக முடித்து காட்ட இப்போதே களத்தில் இறங்கிவிட்டேன் என்றார்.

Story first published: Monday, September 9, 2019, 19:41 [IST]
Other articles published on Sep 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+