For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெண் பாதுகாவலருடன் குத்தாட்டம் போட்ட இந்திய வீராங்கனை... வைரலான வீடியோ

மெல்போர்ன் : இந்தியா -நியூசிலாந்து இடையிலான மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆஸ்திரேலியாவின் பெண் பாதுகாவலருடன் ஆடிய உற்சாக நடனம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ஐசிசி தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் இந்த நடனத்தை பகிர்ந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யானும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, கோப்பையுடன் இந்தியா திரும்புமாறு ஜெமிமாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரையிறுதிக்கு சென்ற இந்தியா

அரையிறுதிக்கு சென்ற இந்தியா

ஆஸ்திரேலியாவில் கடந்த 21ம் தேதி துவங்கி ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற இந்திய மகளிர் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் ஓரம்கட்டினர். தொடர்ந்து வங்கதேசம் மற்றும் நியூசிலாந்தையும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இளம் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

இளம் வீராங்கனைக்கு குவியும் பாராட்டு

இந்த மூன்று போட்டிகளிலும் இளம்திறமை ஷபாலி வர்மா சிறப்பான ஆட்டத்தின்மூலம் கவனம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு அடுத்ததாக இளம் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்சும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் 26 ரன்களையும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 34 ரன்களையும் குவித்த ஜெமிமா இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

வைரலான வீடியோ

இந்நிலையில் நியூசிலாந்திற்கு எதிரான 3வது போட்டிக்கு முன்னதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் அங்கிருந்த பெண் பாதுகாவலருடன் போட்ட ஆட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் சமீபத்தில் வெளிவந்துள்ள பாலிவுட் நடிகர் கார்த்தி ஆர்யானின் லவ் ஆஜ் கல் என்ற படத்தின் பாடலுக்கு ஆடியுள்ளனர். இந்த வீடியோவை முன்னதாக ஐசிசி தன்னுடைய டிவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டு, சிறப்பான ஆட்டம் என்று கேப்ஷன் அளித்துள்ளது.

பிடித்தமான வீராங்கனை என பதிவு

பிடித்தமான வீராங்கனை என பதிவு

இந்நிலையில் ஐசிசியின் இந்த பதிவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெமிமா ஆடிய பாடலின் நாயகன் கார்த்திக் ஆர்யான், அந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மிகவும் பிடித்த வீராங்கனை ஜெமிமா என்று தெரிவித்துள்ள கார்த்தி, கோப்பையுடன் இந்தியா வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலிவுட்டிற்கு அழைத்துவர கோரிக்கை

இதனிடையே ஜெமிமாவிற்கு ஈடுகொடுத்து அவருடன் ஆடிய பெண் பாதுகாவலரை, பாலிவுட்டில் நடிக்க வைக்க இந்தியா வரும்போது உடன் அழைத்து வரும்படியும் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை பலர் டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ள நிலையில் கார்த்திக்கும் அதை கூறியுள்ளார்.

Story first published: Friday, February 28, 2020, 14:55 [IST]
Other articles published on Feb 28, 2020
English summary
Bollywood actor revealed that Jemimah Rodrigues is his favourite player
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+