Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு வந்த புதிய அழுத்தம்.. ஆசிய கோப்பையில் இப்படியா வருவது??.. சாதித்து காட்டுவாரா??

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்திய வீரர் விராட் கோலிக்கு மிகவும் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடர் வரும் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 27 ) முதல் தொடங்கவுள்ளது.

Recommended Video

IND vs PAK போட்டி முதல் Virat Kohli-க்கு புதிய Bat *Cricket

இந்த தொடருக்காக துபாய் சென்றடைந்துள்ள இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நீண்ட ஓய்வில் இருந்த அவர் ஆசிய கோப்பையில் கம்பேக் கொடுத்தே தீர வேண்டும். அதுவும் இந்தியா தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதால், கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோலி புது மைல்கல்

கோலி புது மைல்கல்

இந்நிலையில் பாகிஸ்தானுடனான போட்டி விராட் கோலிக்கு ஒரு மைல்கல் ஆகும். அதாவது விராட் கோலி விளையாட போகும் 100வது டி20 போட்டி இதுவாகும். இதன் மூலம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். ஆனால் மன அழுத்தத்தில் இருந்துள்ள கோலிக்கு இந்த பெரும் போட்டியில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

டி20 ஸ்கோர் விவரங்கள்

டி20 ஸ்கோர் விவரங்கள்

விராட் கோலி இதுவரை 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 3,308 ரன்களை குவித்துள்ளார். இதில் 30 அரைசதங்களும் அடங்கும். டி20ல் விராட் கோலியின் சராசரி 50.12 ரன்கள் ஆகும். சர்வதேச அளவில் டி20ல் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். வரவுள்ள 100வது டி20 போட்டியிலும் அவர் பெரிய ஸ்கோர் அடித்து முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று துபாயில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ஸ்கோர் அடித்த வீரராக உள்ள விராட் கோலி, இந்த முறை பதிலடி கொடுப்பதற்காக காத்துள்ளார். தனது பலவீனமாக பார்க்கப்படும் ஸ்பின்னர்களுக்கு எதிராக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 25, 2022, 13:50 [IST]
Other articles published on Aug 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+