
ஆசிய கோப்பை தொடர்
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பேட்டிங் மிகவும் பலமாக உள்ள போதும், விராட் கோலியின் நிலைமை மட்டும் தான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக இங்கிலாந்து தொடரில் பங்கேற்றிருந்த விராட் கோலி அதிகபட்சமாக 20 ரன்களை மட்டுமே அடித்தார். இதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகிய அவர், நேரடியாக ஆசிய கோப்பைக்கு தான் வரவுள்ளார்.

கோலி பேச்சு
இந்நிலையில் தனது ஃபார்ம் குறித்து விராட் கோலியே பேசியுள்ளார். அதில், இங்கிலாந்தில் நடைபெற்ற சொதப்பல்கள் எல்லாமே ஒரே மாதிரியான தவறை செய்ததால் தான். அதனை நான் கண்டறிந்து, பிரச்சினைகளை சரி செய்துவிட்டேன். ஆனால் தற்போது சரிசெய்வதற்கு எந்தவொரு தவறுகளும் இல்லை. மீண்டு வரவேண்டிய அவசியம் இல்லை.

ப்ளோ கிடைத்துவிட்டது
தற்போது எந்தவித பிரச்சினையும் இல்லாததால், நன்றாக பேட்டிங் செய்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கான ஃப்ளோ கிடைத்துவிட்டால், நான் சிறப்பாக விளையாடுவேன் என்றுதான் அர்த்தம். நான் தற்போது எந்தளவிற்கு விளையாடுகிறேன் என்பதை உணர்ந்து மாற்றியுள்ளேன். ஆசிய கோப்பையில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன் என கோலி கூறியுள்ளார்.

முதல் ஆட்டம்
இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் ஆகஸ்ட் 28ம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வழக்கமாக சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி இந்த முறை அதை வைத்தே கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications