Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப்.. விராட் கோலி சம்பவம் லோடிங்.. பயிற்சியின் போது நிகழ்ந்த சுவாரஸ்யம்!

பார்படாஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் விராட் கோலி ஸ்வீப் ஷாட் ஆடிய வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் புத்தகத்தில் உள்ள இலக்கணத்தில் உள்ள ஷாட்களை மட்டும் வைத்துக் கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மாபெரும் வீரராக உயர்ந்திருப்பது அசாத்தியமானது என்று இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது எம்எஸ் தோனி கூறி இருப்பார். அதன்படி ஸ்ட்ரைட் டிரைவ், கவர் டிரைவ், ஃபிளிக் ஷாட் என்று மரபு ரீதியான ஷாட்களை மட்டுமே விராட் கோலி விளையாடி வருபவர்.

Indian player Virat Kohli practicing reverse sweep against Ravichandran Ashwin in nets

இன்னும் சொல்லப் போனால் தோனியை அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் போன்று கூட வித்தியாசமான ஷாட்கள் விராட் கோலியிடம் இல்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி காரணமாக சூர்யகுமார் யாதவ், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் புதிய புதிய ஷாட்களை உருவாக்கி வருகிறார்கள். அதற்கு எப்படியான ஃபீல்ட் செட் அமைப்பது என்று கூட புரியாமல் களத்தில் கேப்டன்கள் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நேற்று முதல் பேட்டிங் பயிற்சியை சீனியர் வீரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய ஒரு பந்தை விராட் கோலி அசாத்தியமான ரிவர்ஸ் ஸ்வீப் ஆடியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியால் மரபு ரீதியான ஷாட்களில் இருந்து வெளி வந்து ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்களை ஆடி முடிகிறதே என்று வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதுவும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற நம்பர் 1 டெஸ்ட் பவுலரையும் எளிதாக விராட் கோலி ரிவர்ஸ் ஸ்வீப் அடித்ததுள்ளது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் விராட் கோலி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், அவர் இதுபோன்ற புதிய ஷாட்களை முயற்சிப்பது ரசிகர்களிடையே சற்று கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, July 5, 2023, 14:07 [IST]
Other articles published on Jul 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+