நியூசிலாந்து ஒருநாள் தொடர் - இந்திய வீரர்கள் அறிவிப்பு - அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை
டெல்லி: நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோதும் ஒரு நாள் போட்டி வரும் 22, 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் விளையாடவுள்ள நியூஸிலாந்து மற்றும் இந்திய அணியினரை அகில இந்திய மூத்த தேர்வு ஆணையம் இன்று அறிவித்தது.

15 வீரர்களின் பட்டியலில் விராத் கோஹ்லி, டோணி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரஹானே, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சிகார் தவான், சாஹல்ஸ பும்ரா, அக்ஸர் படேல், குல்தீப் ஜாதவ் , புவனேஷ்வர், ஷர்துல் தாக்குர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த போட்டியில் விளையாடுவதற்கு அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.
Story first published: Saturday, October 14, 2017, 18:34 [IST]
Other articles published on Oct 14, 2017


Click it and Unblock the Notifications