ஐசிசி தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்.. முதல் 5 இடங்களில் 3 இந்திய வீரர்கள்.. முழு விவரம்
மும்பை : ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது.
இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கூட நேரடியாக இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு சென்று விடும்.
அப்படி எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் டிராவை கண்டால் கூட இலங்கை அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவினால் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும்.

ஆதிக்கம்
இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு காரணமே ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல் போன்ற ஆல்ரவுண்டர்கள்தான். மூன்று பேரும் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் முக்கியமான கட்டத்தில் ரன்களை அடித்து இந்திய அணியை காப்பாற்றி வருகின்றனர். இதனால் ஐசிசி தரவரிசை பட்டியலில் தற்போது இந்திய வீரர்களின் ஆதிக்கமே தொடர்கிறது.

அஸ்வின்
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் அஸ்வின் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் விக்கெட்டுகளை கைப்பற்றினாலே அவர் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் முதலிடத்தில் உள்ள ஆண்டர்சனுக்கும் அவருக்கும் வெறும் 2 புள்ளிகள் தான் வித்தியாசம் இருக்கிறது.

முன்னேற்றம்
இதேபோன்று பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். காயம் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில் கூட ரிஷப் பண்ட் தொடர்ந்து ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். டெல்லி டெஸ்டில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 16-வது இடத்தில் நீடிக்கிறார்.டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான தரவரிசை பட்டியலில் டெல்லி டெஸ்டில் 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா தற்போது ஏழு இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர் ஆதிக்கம்
இதை போன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் அக்சர் பட்டேல் 158 ரன்கள் தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் ஜடேஜாவும் இரண்டாவது இடத்தில் அஸ்வினும் ஐந்தாவது இடத்தில் அக்சர் பட்டேலும் உள்ளனர். இதைப் போன்று ஜடேஜா ஆல் ரவுண்டர் வரிசையில் முதலிடத்திலும் பேட்டிங்கில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications