
நோக்கம்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இந்திய அணிக்குள் ரோஹித் சர்மா மீண்டும் வந்துள்ளார். இதனால் இந்திய அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்க உள்ளது.

மூன்றாவது டெஸ்ட்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடக்க உள்ளது. நேற்று வரை இந்திய அணி மெல்போர்னில் இருந்தது. இதையடுத்து இந்திய அணி வீரர்கள் இன்று மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு புறப்பட்டு சென்றனர்.

சிட்னி
விமானம் மூலம் இவர்கள் பயணம் செய்தனர். இந்த ஒன்றரை மணி நேர பயணத்தில் இடையில் 30 நிமிடம் விமானம் மோசமாக குலுங்கி உள்ளது. Turbulence என்று சொல்லப்படும் நிகழ்வு நடுவானில் நடந்துள்ளது. அதாவது விமானம் பறக்கும் போது வானிலை, காற்றின் வேகம், அழுத்தம் காரணமாக விமானம் குலுங்குவது உண்டு.

ஆடும்
நன்றாக சென்று கொண்டு இருக்கும் விமானம் திடீரென ஆடும். இந்த Turbulence இயல்பாக நடக்க கூடிய விஷயம்தான். ஆனால் சமயங்களில் இது மிகவும் அச்சம் ஊட்ட கூடியதாக இருக்கும். இந்த நிலையில் இந்திய வீரார்கள் பயணம் செய்த விமானமும் இன்று கடுமையான Turbulenceக்கு உள்ளாகி இருக்கிறது.

பாதுகாப்பு
இதனால் இந்திய வீரர்கள் பயந்தபடியே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். ஆனால் விமானம் அதன்பின் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த சில வீரர்கள் இதனால் கடுமையான பதற்றத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











