Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 கொரோனா டெஸ்ட் எடுத்தாச்சு... எல்லாத்துலயும் நெகட்டிவ் ரிசல்ட்தான்... ஜரூராக தயாராகும் வீரர்கள்

சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான தொடர்கள் வரும் 5ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

இதையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் சென்னையில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் தங்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணியினருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்த நிலையில் தற்போது இந்திய வீரர்களுக்கு 3 முறை எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.

குவாரன்டைனில் வீரர்கள்

குவாரன்டைனில் வீரர்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடருடன் 3 வடிவங்களிலான தொடர்கள் துவங்க உள்ளது. முதலில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் இரு போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி சென்னையில் இந்திய வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

பிசிசிஐ அனுமதி

பிசிசிஐ அனுமதி

சென்னையில் ஹோட்டலில் இந்திய வீரர்கள் குவாரன்டைனில் உள்ள நிலையில், அவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் தங்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களின்போது வீரர்கள் தங்களது குடும்பதினரை பிரிந்திருந்த நிலையில் பிசிசிஐ இந்த அனுமதியை அளித்துள்ளது.

குடும்பத்தினருடன் குவாரன்டைன்

குடும்பத்தினருடன் குவாரன்டைன்

சென்னையில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே, துவக்க வீரர் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் விரித்திமான் சாஹா, ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் பிரபல

ஹோட்டலில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

நெகட்டிவ் ரிசல்ட்

நெகட்டிவ் ரிசல்ட்

இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு இதுவரை 3 முறை கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 3 பரிசோதனைகளிலும் அனைத்து வீரர்களுக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. முதல் போட்டி வரும் 5ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் முன்னதாக மேலும் 2 டெஸ்ட்கள் எடுக்கப்பட உள்ளது.

Story first published: Friday, January 29, 2021, 15:46 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+