Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா முன்னேற்றம்.. பாபர் அசாம் சரிவு

துபாய் : சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா ஆஸ்திரேலியா எதிரான முதல் டி20 க்கு பிறகு தரவரிசை பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

Recommended Video

ICC அறிவித்த Playing Conditions! Mankad முதல் Saliva Ban வரை | Aanee's Appeal | *Cricket

குறிப்பாக சூரியகுமார் யாதவ் 46 ரன்கள் விளாசி பட்டையை கிளப்பினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் 825 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார் .

தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் 792 இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார் சூரியகுமார் யாதவ் தற்போது ஒரு இடம் முன்னேறி 780 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் 208 ரன்கள் அடித்தும் தோல்வி.. இந்திய பந்துவீச்சை பொளந்த ஆஸி. வீரர்கள்.. எங்கு சரிந்தது இந்தியா

 பாபர் - கோலி சரிவு

பாபர் - கோலி சரிவு

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தற்போது 771 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் ஐந்தாவது இடத்தையும் ஆஸ்திரேலியா கேப்டன் பிஞ்ச் 6வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்த விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி 16வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஹர்திக் முன்னேற்றம்

ஹர்திக் முன்னேற்றம்

அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 72 ரன்கள் விளாசி, 22 இடங்கள் முன்னேறி 65 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதேபோன்று பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் அக்சர் பட்டேல் 24 இடங்கள் முன்னேறி 33வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வர்குமார் பின்னடைவு

புவனேஸ்வர்குமார் பின்னடைவு

முதலிடத்தில் ஹேசல்வுட்டும், இரண்டாவது இடத்தில் தப்ரைஸ் சாம்ஷியும் , மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித்தும் உள்ளனர். கடந்த சில போட்டிகளாக அதிக ரன்களை விட்டுக் கொடுத்தவரும் புவனேஸ்வர் குமார் தற்போது இரண்டு இடங்கள் பின் தங்கி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

டி20 அணி தரவரிசை பட்டியல்

டி20 அணி தரவரிசை பட்டியல்

டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியுற்றாலும் 268 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 262 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 258 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அதே புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்து 252 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் , ஆஸ்திரேலியா 250 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் இருக்கின்றது.

Story first published: Wednesday, September 21, 2022, 22:49 [IST]
Other articles published on Sep 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+