Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 நாளில் போட்டி முடிந்துவிடும்..ஆடுகளத்தை பார்த்து ரோகித் ஷாக்.. பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

இந்தூர் : பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்திலேயே 3வது டெஸ்ட் போட்டிக்கு போடப்பட்ட இந்தூர் மைதானம் தான் பேட்டிங்கிற்கு சாதகமானது என்று சொல்லப்பட்டது.

இந்தூர் மைதானமும் ரன் குவிப்புக்கு சாதகமானது என்பதால் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.

அதற்கு தகுந்தார் போல, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

பவுன்ஸ் குறைவு

பவுன்ஸ் குறைவு

வேகப்பந்துவீச்சாளர்கள் முதலில் பந்துவீசிய போது பேட்ஸ்மேன்கள் எந்த நெருக்கடியும் இன்றி விளையாடினார்கள். ஆனால் சுழற்பந்துவீச்சாளர்கள் கையில் பந்து வந்த உடன், ஆட்டமே தலைக்கீழ் மாறியது. பந்தின் பவுன்ஸ் எதிர்பார்த்த அளவு இல்லாமல் மிகவும் குறைவாக இருந்தது.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

பேட்ஸ்மேன்களில் கணுக்கால் அளவு தான் சில பந்துகள் பவுன்ஸ் ஆனது. இதில் சில பந்து நன்றாக திரும்பியதால், இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தது. ரோகித் சர்மா 12 ரன்களில் ஸ்டம்ப் அவுட்டாக, சுப்மான் கில் சிலிப்பில் கேட்ச் ஆனார்.

45/5 விக்கெட்

45/5 விக்கெட்

இதே போன்று புஜாரா எதிர்கொண்ட பந்து நன்றாக திரும்பி போல்ட் ஆக்கியது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயர் பவுன்ஸ் ஆகாத பந்தை அடிக்க முயன்று எட்ஜ் ஆகி போல்ட் ஆனார். இதனால் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்த 18 ரன்கள் சேர்ப்பதற்குள் மேலும் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ரவி சாஸ்த்ரி கருத்து

ரவி சாஸ்த்ரி கருத்து

தற்போது விராட் கோலியும், கே எஸ் பரத்தும் இணைந்து விளையாடி வருகின்றனர். எனினும் இந்த ஆடுகளம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்த்ரி, பந்தின் பவுன்ஸ் குறைவாக இருந்தாலும், தற்போது ஆடுகளம் செட்டில் ஆகி விட்டது என்றும், இனி பந்து திரும்ப வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, March 1, 2023, 11:28 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+