Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ வீரர்களை அடக்க கூடாது.. இனி இதை செய்யவில்லை என்றால் பிரச்சனை தான்.. எச்சரிக்கும் உத்தப்பா!

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய முன்னாள் வீரர்கள் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியிடம் வெற்றிபெற வேண்டும் என்ற பசியையோ, வெறியையோ காண முடியவில்லை. சில நேரங்களில் அடிப்படைகளை கூட சரியாக செய்யாமல் தோல்வியை தழுவி வருகின்றனர் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்று ஐடியா கொடுத்துள்ளார்.

Indian players should play in foreign T20 Leagues says Robin Uthappa

இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா பேசுகையில், இனி வரும் காலங்களில் இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினால் மட்டும் போதாது. வெளிநாடு டி20 லீக்குகளிலும் பங்கேற்க பிசிசிஐ அனுமதியளிக்க வேண்டும். அங்கிருக்கும் சூழலை இந்திய அணி வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்றால், ஐபிஎல் வியாபாரம் பெரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் அப்படி செய்தால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி வீரர்கள் சொதப்புவதற்கும் அதே முடிவு காரணமாக இருக்கும். ஏனென்றால் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நமது நாட்டு பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் போது கூடுதல் சாதகம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது இந்திய வீரர்களின் பந்துவீச்சை அதிகமாக எதிர்கொள்கிறார்கள்.

அந்த அனுபவம் வெளிநாடு வீரர்களுக்கு இருநாட்டு கிரிக்கெட் தொடர்களிலும், ஐசிசி தொடர்களிலும் உதவியாக இருக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் இந்திய பவுலர்களின் வேறுபாடு, டெக்னிக், ஆட்ட நுணுக்கம் அனைத்தையும் ஐபிஎல் தொடர் மூலமாக வெளிநாட்டு வீரர்களால் புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற விஷயங்கள் அழுத்தமான நேரங்களிலும் அவர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. இதனால் இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, August 7, 2023, 21:13 [IST]
Other articles published on Aug 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+