Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுவரிடம் சேட்டை செய்த இந்திய வீரர்கள்.. இலங்கை வீரரை எச்சரித்த ரோகித் சர்மா.. என்ன நடந்தது?

தர்மசா

லா: இல்ங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது இந்திய வீரர்கள் சேட்டை செய்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

வாழ்வா சாவா கட்டத்தில் களமிறங்கிய இல்ங்கை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.

முதலில் பொறுமையாக விளையாடிய இலங்கை அணி, கடைசி 5 ஓவரில் 80 ரன்களை விளாசினர்.

இலங்கை ரன்குவிப்பு

இலங்கை ரன்குவிப்பு

நிசாங்கா 53 பந்துகளில் 75 ரன்கள் விளாச, கேப்டன் சனாகா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாச, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ரசிகர்களை கவரும் நிறைய சுவாரஸ்ய விசயங்கள் நடைபெற்றது.

தொந்தரவு

தொந்தரவு

ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து நன்றாக ஸ்விங் அனதால், ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மா கேட்ச் பிடிப்பதற்கு விளம்பர பலகை தொந்தரவு செய்வதாக கூறினார். இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. ஆனால், அதன் பிறகு ரோகித் சிலிப்பில் நிற்கவில்லை.

ரோகித் எச்சரிக்கை

ரோகித் எச்சரிக்கை

ஆட்டத்தின் கடைசி ஓவரில் எதிர் முனையில் நின்ற கருணரத்னே பந்து வீசவதற்குள் முன் ஓட தொடங்கினார். இதனால் ஹர்சல் பட்டேல் பந்துவீசுவதை பாதியில் நிறுத்தினார். இதனையடுத்து ரோகித் சர்மா நடுவரிடம் சென்று, கருணரத்னே மீது புகார் அளித்தார். இதனையடுத்து கருணரத்னேவை நடுவர் எச்சரித்தார்.

இந்தியா சேட்டை

இந்தியா சேட்டை

இந்த நிலையில் ஆட்டத்தின் 9.5வது ஓவரில் அசாரங்கா, சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை அசரங்கா மறு ஆய்வு செய்த போது, அது அவுட் என உறுதி ஆனது. அப்போது களத்திற்குள் வந்த இன்றைய போட்டியில் விளையாடாத இந்திய வீரர்கள் நடுவர் பின்னால் நின்று அவுட் வழங்கினர். அப்போது குல்தீப், நடுவர் மீது லேசாக இடித்துவிட்டார். இந்த காட்சி தற்போது வைரலாகிறது. எனினும் இது நகைச்சுவையாக இருந்தாலும் ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, February 26, 2022, 21:23 [IST]
Other articles published on Feb 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+