எதற்காக இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள் தெரியுமா?
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தவான்,பும்ரா மற்றும் அறிமுக வீரராக ரிஷப் பந்த் இடம் பெற்றனர்.

இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்யும்போது தங்களது டெஸ்ட் உடையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதற்கான காரணம் இதுதான். கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
வடேகர் கடந்த 15ஆம் தேதியும் ,வாஜ்பாய் ஆகஸ்ட் 16ஆம் தேதியும் காலமானார்கள்.
Story first published: Sunday, August 19, 2018, 11:19 [IST]
Other articles published on Aug 19, 2018


Click it and Unblock the Notifications