சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்.. டரியல் ஆகிக் காணப்படும் இங்கிலாந்து
Recommended Video

சாதனை படைக்க காத்திருக்கும் இந்திய வீரர்கள்..வீடியோ
லண்டன்: இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள் பலர் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் சில முக்கியமான மைல்கல்களை கடக்க விருக்கிறார்கள்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் மிக முக்கியமான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்குகிறது.
இப்போட்டி தொடரில் பல இந்திய வீரர்கள் தங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் சில முக்கியமான மைல்கல்களை கடக்க விருக்கிறார்கள். அதனைப்பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

முரளி விஜய்:
இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்தான தொடக்க வீரர் முரளி விஜய். இவர் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3907 ரன்களை குவித்துள்ளார். இவர் இன்னும் 93 ரன்களை எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 16ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
அஜிங்க்யா ரஹானே:
இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2893 ரன்களை குவித்துள்ளார். இவர் இன்னும் 107 ரன்களை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்த 22ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
விராட் கோஹ்லி:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒரு மிக முக்கியமான சாதனையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார். இந்திய டெஸ்ட் வரலாற்றில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் வரிசையில் சௌரவ் கங்குலியுடன் இவர் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.மொத்தம் 21 வெற்றிகள். இவர் இத்தொடரில் ஒரு போட்டியில் வென்றால் 22 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தை பிடிப்பார். முதல் இடத்தை 27 வெற்றிகள் பெற்று தோனி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோஹ்லி 35 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி 21 வெற்றிகளை பெற்றுள்ளார். குறைந்த போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லிக்கே சேரும்.
Story first published: Thursday, July 26, 2018, 18:25 [IST]
Other articles published on Jul 26, 2018


Click it and Unblock the Notifications