Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவில்லியர்ஸ் ஓய்வை கலாய்த்த இந்திய பவுலர்.. கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்.. வெடித்த புதிய சர்ச்சை!

சென்னை: ஏபி டிவில்லியர்ஸின் ஓய்வை சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கிண்டல் செய்துள்ளதால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

Recommended Video

AB de Villiers retires from cricket, to miss IPL and RCB | OneIndia Tamil

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவனாக விளங்கி வரும் ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

கடந்த 2018ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர், தற்போது ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் இருந்தும் வெளியேறியுள்ளார்.

டிவில்லியர்ஸ் ஓய்வு

டிவில்லியர்ஸ் ஓய்வு

சர்வதேச ஓய்வுக்கு பின்னர் டிவில்லியர்ஸால் தனது பழைய அதிரடிகளை காட்ட முடியவில்லை. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் தூணாக விளங்கிய அவரால் பெரும் பங்களிப்பை கொடுக்க முடியாமல் போனது. இதற்கு காரணம் அவரின் வயது தான். எனவே ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என மனம் உருகிய பேச்சுடன் டிவில்லியர்ஸ் விடைபெற்றுள்ளார்.

கிளம்பிய புதிய சர்ச்சை

கிளம்பிய புதிய சர்ச்சை

அவரின் இந்த அறிவிப்பால் ஒருபுறம் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மற்றொருபுறம் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் டிவில்லியர்ஸை கிண்டலடித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்தவர் பர்விந்தர் அவானா. அவர் டிவ்ல்லியர்ஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பர்விந்தர் வீடியோ

2013ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏபி டிவிலியர்ஸ் விளையாடியபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா விளையாடினார். அப்போது நடைபெற்ற ஒரு போட்டியில் ஏபி டிவிலியர்ஸை பர்விந்தர் கிளின் போல்ட் ஆக்கியிருந்தார். அந்த வீடியோவை பதிவிட்டு "கிரிக்கெட்டிற்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

பர்விந்தர் புள்ளிவிவரம்

பர்விந்தர் புள்ளிவிவரம்

அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக தொடங்கியதை அடுத்து, ரசிகர்கள் பலரும் பர்விந்தருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் பர்விந்தர் குறித்த வீடியோக்களை வெளியிட்டு கிண்டலடித்து வருகின்றனர். பர்விந்தர் மொத்தம் 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அவருக்கு பிசிசிஐ வாய்ப்பே கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, November 20, 2021, 17:50 [IST]
Other articles published on Nov 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+