Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"முடியலனா போயிடுங்க" - "ஓபன்" மீட்டிங்கில்.. கோலி ஆக்ரோஷம் - நொந்து வெளியேறிய சீனியர் வீரர்

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு, அணியில் இன்னும் என்னென்ன சிக்கல் வெடிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்வி, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை பல வகையில் யோசிக்க வைத்திருக்கிறது.

குறிப்பாக, அணியில் பாரமாக இருக்கும் வீரர்கள் யார் என்ற தனி பட்டியலை பிசிசிஐ தயார் செய்து வருவதாக தெரிகிறது.

 சரிவடைந்த பெயர்

சரிவடைந்த பெயர்

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. இதற்கான, இந்திய அணியை தேர்வு செய்வதில், பிசிசிஐ தீவிரமாக உள்ளது. ஆனால், இத்தொடருக்கான இந்திய அணியில் எந்த காம்ப்ரமைஸும் இருக்கக் கூடாது என்பதில் பிசிசிஐ மிகத் தெளிவாக உள்ளது. ஏனெனில், ஒரு சாதாரண வழக்கமான டெஸ்ட் தொடரை இந்திய அணி தோற்பதால் ஏற்படும் பாதிப்பை விட, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி, இந்திய அணியின் பெயரை ஏகத்துக்கும் குறைந்துள்ளதாக பிசிசிஐ கருதுகிறது. அது உண்மையும் கூட.

 தோற்ற விதம் ஏமாற்றம்

தோற்ற விதம் ஏமாற்றம்

இப்போட்டியில் இந்திய அணி தோற்றதை விட, தோற்ற விதம் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதைத் தான் சமீபத்திய அணி ஆலோசனை கூட்டத்தில் விராட் கோலி மற்றும் கோச் ரவி சாஸ்திரியிடம் சற்று காட்டமாகவே தெரிவித்திருக்கிறது பிசிசிஐ தரப்பு. இந்நிலையில், WTC ஃபைனலில் காற்றில் கரைந்த போன பெயரை, மீண்டும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீட்டு கொண்டு வர வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது.

 முக்கிய வீரர்கள் பங்கேற்பு

முக்கிய வீரர்கள் பங்கேற்பு

இந்த டென்ஷனான சூழலில் தான், சமீபத்தில் சாஸ்திரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணித் தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீட்டிங்கில் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக சில முக்கிய வீரர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தெரிகிறது. அதில், புஜாராவும் ஒருவர்.

 சலசலப்பு

சலசலப்பு

இதில், முதல் இரு டெஸ்ட் போட்டியில், முதல் போட்டியில் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம் என்று கேப்டன் கோலி கூறியிருப்பதாக தெரிகிறது. அதாவது, அணியில் வீரர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள்.. ஆனால், அந்த வாய்ப்பு மீண்டும் மீண்டும் வழங்கப்படாது என்பதை கோலி சூசகமாக தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் உபயோகித்த ஒருசில வார்த்தைகள் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, சீனியர் வீரர்களுக்கும் இந்த நிலைமை பொருந்தும் என்றும் கோலி கூறியிருப்பதாக தெரிய வருகிறது.

 வெளியேறிய ரோஹித்

வெளியேறிய ரோஹித்

கோலி குறிப்பிட்ட இந்த சீனியர் வீரர்கள் என்ற வட்டத்தில் 'ரோஹித், புஜாரா, இஷாந்த்' ஆகிய மூன்று வீரர்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. இதில், இஷாந்த் தற்போது காயத்தில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார். எனினும், போட்டி தொடங்க இன்னும் ஒரு மாத காலம் முழுமையாக இருப்பதால், அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்துவிடுவார். தவிர, ரோஹித், புஜாரா அணியில் உள்ளனர். ஸோ, இந்த மூன்று வீரர்களை கார்னர் செய்யும் விதமாக கோலி பொதுவாக பேச, புஜாரா உடனடியாக அணி மீட்டிங்கில் இருந்து எக்ஸிட் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், யார் என்ன கோபித்துக் கொண்டாலும், இங்கிலாந்து தொடரில் வெற்றி என்பதே இலக்கு என்பதில் கோலியும் தீவிரமாக உள்ளார். பிசிசிஐ-யும் தீவிரமாக உள்ளது.

Story first published: Friday, July 2, 2021, 15:12 [IST]
Other articles published on Jul 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+