லண்டன்: இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரருடன், கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் ஆடும் வீடியோ, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
உலக கோப்பை போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. இன்றுடன் லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. அரையிறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

அடுத்தக்கட்ட போட்டிகளுக்காக 4 அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பயிற்சியில் நடுவில் இங்கிலாந்து கால்பந்து அணியைச் சேர்ந்த பிரபலர வீரரான ஹாரி கேனை கேப்டன் விராட் கோலி சந்தித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்தனர். ஹாரி கேனை சந்தித்த கோலி அவரிடம் கூறியதாவது: பயிற்சியின் போது உடற்பயிற்சிக்காக கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து விளையாடுவது வழக்கம். ஆனால் எந்தக் கால்பந்து வீரரும் கிரிக்கெட் விளையாடுவதில்லை. ஆனாலும், கால்பந்து விளையாடுவது மிகவும் பிடித்த ஒன்று என்றார்.
இதனிடையே கோலியுடனான சந்திப்பு குறித்து ஹாரி தமது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: விராட் கோலியுடன் நேரத்தை செலவிட்டேன். இங்கிலாந்து அணியுடன் விளையாடாத வரை கோலிக்கும் அவரது அணிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இருவரும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.