Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவறை திருத்திக்கொண்ட கோலி.... நுணுக்கமான மாற்றங்கள்...குவிந்து வரும் பாரட்டுக்கள்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் டக் அவுட்டான கோலி, 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் பல்வேறு மாற்றங்களை செய்து அரை சதம் அடித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் கோலியின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் பாராட்டப்பட்டு வருகிறது.

முதல் இன்னிங்சில் அவசரப்பட்டு தவறான ஷாட் ஆடி விமர்சனத்திற்கு உள்ளான கோலி, 2வது இன்னிங்சில் பல மாற்றங்களை செய்து கொண்டார்.

கவர் ட்ரைவ்

கவர் ட்ரைவ்

விராட் கோலிக்கு கவர் ட்ரைவ் ஆடுவதில் கில்லாடி என்றே கூறலாம். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் மொயின் அலி வீசிய பந்தில் கோலி தொடக்கத்திலேயே கவர் ட்ரைவ் ஆட முயன்றார். ஆனால் பந்தில் நல்ல ஸ்விங் இருந்ததால் ஸ்டம்பை உறசிச்சென்றது. அவரின் இந்த அவசர முடிவுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

நிதானம்

நிதானம்

முதல் இன்னிங்சில் செய்த தவறை 2வது இன்னிங்சில் செய்யக் கூடாது என்பதால் கோலி மிக பொறுமையாக விளையாடினார். 20 பந்துகளுக்கு பிறகே கோலி தன் முதல் ரன்னை எடுத்தார். இதற்கு முன்னர் 2012ல் 29 பந்துகள் எடுத்துக்கொண்டதே அவரின் அதிகபட்ச நேரமாகும்.

 பொறுப்பு

பொறுப்பு

கடந்த போட்டி போல் இல்லாமல் இந்த முறை, தான் சந்தித்த 103வது பந்தில் தான் ஸ்வீப் ஷாட் ஆடவே கோலி முற்பட்டார். மேலும் கடந்த முறை போன்று மிடில் ஸ்டம்ப்பில் நின்று ஸ்வீப் ஷாட் ஆடாமல், ஆஃப் ஸ்டம்பை மறைத்து தனது பேட்டிங்கை வெளிப்படுத்தினார். மொத்தமாக அவர் 200 நிமிடங்கள் வரை களத்தில் நின்றுள்ளார்.

ஒற்றுமை

ஒற்றுமை

2வது இன்னிங்சில் அஸ்வின் - கோலி ஜோடி 96 ரன்கள் சேர்த்தது. இதில் அடித்து ஆட நினைக்காத கோலி, சுழற்சி முறையில் ஸ்ட்ரைக்கை மாற்றி விளையாடினார். இதனால் கோலி எடுத்த 62 ரன்களில் அதிகளவில் சிங்கில்ஸ், டபுல்ஸாக அமைந்தது. 7 பவுண்டரிகளே அவர் அடித்தார்.

Story first published: Tuesday, February 16, 2021, 14:51 [IST]
Other articles published on Feb 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+