ஜிங்க்ஸ்... சீக்கிரம் பார்முக்கு வருவார்... அப்போ பாருங்க ஆட்டத்தை..! குத்திக் காட்டும் கோலி?
Recommended Video
மும்பை: அஜிங்க்யா ரகானே சீக்கிரம் பார்முக்கு வந்து, அற்புத ஆட்டத்தை தருவார் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.
உலக கோப்பைக்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த தோல்விக்குப் பிறகு குறைந்த ஓவர் போட்டிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
ஆனால், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் ஷர்மா துணைக் கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு அஜிங்க்யா ரகானே துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

40 ரன்கள்
அஜிங்க்ய ரஹானேவின் டெஸ்ட் சராசரி ரன்கள் 40. ஆனாலும் சில போட்டிகளாக ரன் எடுக்க சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் அஜிங்க்யா ரகானே குறித்து கோலி கருத்து கூறியுள்ளார்.

விலை மதிப்பற்ற பீல்டர்
அவர் கூறியிருப்பதாவது: ஜிங்க்ஸ் (ரகானே) சிறந்த வீரர். சீராக விளையாடக் கூடியவர். அவர் இந்த ஆட்டத்தை சரியாக புரிந்துகொள்ளக் கூடியவர், விலை மதிப்பற்ற பீல்டர்.

நெருக்கடி நிலை
டெஸ்ட் போட்டியின்போது பீல்டிங்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எல்லோருமே பார்த்து இருக்கிறோம். நெருக்கடியான நிலையிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.

பார்முக்கு வருவார்
இந்த வயதிலேயே அவருடைய டெஸ்ட் சராசரி 40 ஆக உள்ளது. அவரைப் போன்ற ஒருவரிடம் அவசரப்பட தேவையில்லை. மீண்டும் நல்ல ஆட்டத்தை விரைவில் வெளிப்படுத்துவார். அந்த அளவுக்கு அவர் மிகச் சிறந்த வீரர் என்றார்.


Click it and Unblock the Notifications