For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உண்மையில் நீங்கள் ஒரு சாம்பியன்..! ஓய்வு மகிழ்ச்சியாக அமையட்டும்..! டுவீட் போட்ட ‘நண்பேன்டா கோலி’

புளோரிடா: நீங்கள் ஒரு சாம்பியன், உங்கள் ஓய்வு மகிழ்ச்சியாக அமைய வாழ்த்துக்கள் என்று டேல் ஸ்டெயினுக்கு கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டு காள டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Indian skipper kohli wishes dael steyn for his retirement decision

அது மட்டுமல்லாமல், டெஸ்ட் வரலாற்றில் 8வது அதிக விக்கெட் எடுத்த வீரர் என்னும் பெருமையினையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் (575),மெக்ராத் (563), வால்ஷ் (519) மற்றும் ஸ்டூவர்ட் பிராட் (450) ஆகியோரை தொடர்ந்து அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்களில் 5வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் டி20, ஒருநாள் போட்டிகளில் ஸ்டெய்ன் தொடர்ந்து விளையாடுவார் என தெரிகிறது. இந்நிலையில் ஸ்டெய்ன் அறிவித்த இந்த ஓய்வு முடிவு குறித்து கேப்டன் விராட் கோலி ட்வீட் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அதில் கோலி கூறி இருப்பதாவது : நீங்கள் ஒரு சாம்பியன் வீரர். உங்கள் ஓய்வு மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள், நீங்கள் ஒரு பேஸ் மெஷின் என்று டுவீட் செய்துள்ளார். கோலியும், ஸ்டெயினும் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். நடந்து முடிந்த ஐபிஎல்லில் கூட ஒரு போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஸ்டெய்ன், பின்னர் காயம் காரணாமாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 6, 2019, 12:13 [IST]
Other articles published on Aug 6, 2019
English summary
Indian skipper kohli wishes dael steyn for his retirement decision.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X