Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிங் கோலிக்கு இன்னொரு மகுடம்.. ராஜீவ் கேல் ரத்னா விருது பெற்றார்!

டெல்லி: குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

கடந்த வாரம் விளையாட்டு அமைச்சகம் இன்று கேல் ரத்னா விருதுகள் மற்றும் இதர விளையாட்டு விருதுகள் வென்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டது.

Indian skipper Virat Kohli gets Rajiv Gandhi Khel Ratna Award

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி மற்றும் மீராபாய் சானு பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

தற்போது இதற்கான விருது வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் விராட் கோலிக்கு விருது வழங்கப்பட்டது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதை வழங்கினார். இவர் விருது வாங்கும் போது கைதட்டல்கள் அறையை நிறைத்தது.

இதுவரை இந்தியாவில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே கேல் ரத்னா விருது வென்றுள்ளார்கள். 2007இல் தோனி, 1997இல் சச்சின் ஆகியோர் இந்த விருதை வென்ற கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 25, 2018, 19:19 [IST]
Other articles published on Sep 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+