Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப்போட்டி பிரஷர்? நியூசிலாந்துக்கு இருக்கும் ஒரு சாதகம்.. இந்திய அணியின் நிலையை உடைத்த கோலி!

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டியை எதிர்கொள்வது குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணி இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்படவுள்ள நிலையில், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர்.

முக்கியமானது

முக்கியமானது

கோலி பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அதிக மதிப்பு கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். இது நம் அனைவரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெகுமதி போன்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அழுத்தம்

அழுத்தம்

இந்த போட்டிக்காக எந்த பிரஷரும் எனக்கு இல்லை. நான் இந்திய அணியை முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும் அதுதான் மனதில் உள்ளது. இதற்கு முன்னர் எந்த பிரஷரும் இல்லாத போது, தற்போது மட்டும் எப்படி வரும். நமக்கு முன்னதாக நியூசிலாந்து அணி அங்கு சென்றுவிட்டது பெரிய விஷயம் அல்ல.

பிரச்னை இல்லை

பிரச்னை இல்லை

நியூசிலாந்து அணி ஏற்கனவே அங்கு சென்று பயிற்சி மேற்கொள்வது குறித்து பேசிய கோலி, நாங்கள் ஒன்னும் முதல்முறையாக இங்கிலாந்து செல்லவில்லை. அந்த களம் குறித்து எல்லாம் நினைவு இருக்கிறது. எனவே 4 பயிற்சி ஆட்டங்கள் மட்டும் இருப்பது எங்களுக்கு பெரிய பிரச்னை கிடையாது.

கடின உழைப்பு

கடின உழைப்பு

இந்த இறுதிப் போட்டியோடு எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். அந்த இடத்திற்கு செல்ல நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இது கால்பந்து போன்றது, நீங்கள் ஒரு சாம்பியன்ஸ் லீக்கை வென்றால், அத்தோடு நிறுத்த மாட்டீர்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற விரும்புவீர்கள் எனக்கூறினார்.

சாஸ்திரி

சாஸ்திரி

தொடர்ந்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவது இதுவே முதன் முறை. இது மிகப்பெரிய போட்டியாக அமையப் போகிறது. ஏன் இது உங்களை சோதிக்கும் ஒரு வடிவமாகவும் இருக்கும். உலக அணிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று மோதியுள்ளன. இறுதிப்போட்டியில் இந்த 2 அணிகளும் தகுதிப்பெற்றுள்ளன எனக்கூறினார்.

Story first published: Wednesday, June 2, 2021, 21:06 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+