இதெல்லாம் ஒரு சாதனையா.... தோனியை பின்னுக்கு தள்ளிய கோலி.. 2வது டெஸ்டில் சொதப்பல்
சென்னை: இங்கிலாந்துடனான 2வது டெஸ்டில் டக் அவுட்டானதன் மூலம் மோசமான சாதனை பட்டியல் ஒன்றில் தோனியை விராட் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்திய அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ரோகித் ஷர்மா மற்றும் ரஹானே அணியை மீட்டு வருகின்றனர்.

சொதப்பல்
கடந்த போட்டியில் விராட் கோலி 72 ரன்கள் அடித்த நிலையில் இப்போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 11வது டக் அவுட்டானார்.

இதுதான் முதன்முறை
சுழற்பந்துவீச்சாளரிடம் கோலி முதல் முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். இதற்கு முன்னர் கோலி ரவி ராம்பால், பென் ஹில்பென்ஹாஸ், லியாம் பிளங்கட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்சல் ஸ்டார்க், சுரங்கா லக்மல், ஸ்டூவர்ட் பிராட், பாட் கம்மின்ஸ், கேமார் ரோச், அபே ஜாவேத் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களிடமே டக் அவுட்டாக்கியுள்ளார்.

மோசமான சாதனை
அனைத்து வடிவ சர்வதேச போட்டிகளிலும் அதிக முறை டக் அவுட்டான இந்திய கேப்டன்களின் பட்டியலில் தோனியை பின்னுக்கு தள்ளி கோலி 2வது இடத்திற்கு சென்றுள்ளார். பட்டியலில் சௌரவ் கங்குலி 13 டக் அவுட்டுடன் முதல் இடத்திலும், தோனி 11 டக் அவுட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

கடைசி சதம்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் கோலி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்ததே அவரின் கடைசி சதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications