
பிசிசிஐ
ஐபிஎல்-ல் ஏற்பட்ட கொரோனா பிரச்னை, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி இந்திய அணி வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் பயோபபுளில் உள்ளனர். இந்திய அணி கேப்டன் கோலி மும்பையில் தான் வசித்து வருகிறார் என்பதால், வீட்டு தனிமையில் இருந்துவிட்டு, அவர் சமீபத்தில் தான் பபுளில் இணைந்தார்.

உரையாடல்
இந்நிலையில், பபுளில் டைம் பாஸ் ஆகாததால் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். அப்போது, ரசிகர் ஒருவர் கோலியின் டையட் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கோலி, நிறைய காய்கறிகள், முட்டைகள், 2 கப் காபி, கீரை வகைகள் மற்றும் தோசை இவை அனைத்தையும் அளவோடு எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார். ஆனால், இந்த ட்வீட்டே கோலிக்கு எதிராக அமைந்துவிட்டது.

என்ன காரணம்
இதனைக் கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் விராட் கோலி இதற்கு முன்னதாக பத்திரிகை பேட்டி ஒன்றி தான் சைவத்தை பின்பற்றுபவன் என்றும் தனக்கு அசைவத்தை எடுத்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சைவத்தை பின்பற்றுவதாக கூறிய கோலி எப்படி முட்டையை தனது உணவாக எடுத்துக் கொண்டு வருகிறார்? அவர் எப்படி நான் ஒரு சைவம் என கூறிக்கொள்ளலாம்? என நெட்டிசன்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

முற்றுப்புள்ளி
இந்நிலையில் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், நான் சைவத்தை சேர்ந்தவன் எனக்கூறி கொள்ள ஆசைப்படமாட்டேன். ஆனால் சைவத்தை தான் எப்போதும் பின்பற்றுகிறேன். உங்களுக்கும் விருப்பம் இருந்தால் காய்கறிகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார். இந்த பதிலில் கோலி என்னதான் கூற வருகிறார் என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











