என்னை யாருன்னு நினைச்சீங்க..? அசைக்க முடியாத இடத்தில் கோலி..! குஷியில் ரசிகர்கள்
துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.
உலக கோப்பை கொண்டாட்டங்கள் முடிந்த நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது. அதற்கான வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 வகை போட்டிகளுக்குமே கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்திலேயே நீடித்து வந்தார்.

முதலிடத்தில் பும்ரா
அதே போல் பந்துவீச்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். இந் நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

கோலி 922 புள்ளிகள்
பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளை எடுத்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். 2வது இடத்தில் 913 புள்ளிகளுடன் நியூசி. கேப்டன் கேன்வில்லியம்சன் உள்ளார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா 881 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறார்.

இந்தியாவின் ஆதிக்கம்
கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. டெஸ்ட் சிறந்த பவுலர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முறையே 6வது, 10வது இடத்தில் உள்ளனர். டெஸ்ட் சிறந்த ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முறையே 3வது, 6வது இடத்தில் உள்ளனர்.

10வது இடத்துக்கு முன்னேற்றம்
ஹர்திக் பாண்டியா ஒருநாள் போட்டிக்கான சிறந்த ஆல்ரவுண்டரில் 10வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். டி 20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கேஎல் ராகுல், ரோகித் சர்மா முறையே 5வது, 10வது இடத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications