Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடையை தட்டி நடிகர் கில்லி விஜய்யாக மாறிய விராட் கோலி..! இது தான் காரணமா?

Recommended Video

Dhoni : Indian Kabaddi Team : வாய்ப்பு கிடைத்தால் தோனியை கபடிக்கு தேர்வு பண்ணுவேன் - விராட் கோலி

ஜெய்பூர்: புரோ கபடி லீக்கில், நடிகர் விஜய்யாகி மாறி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தேசிய கீதம் பாடி போட்டியை தொடக்கி வைத்தார்.

7வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன்படி அட்டவணை தயாரிக்கப்பட்டு போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.

Indian skipper virat kohli styled like famous tamil actor vijay in pro kabaddi league 2019

புரோ கபடி தொடரில் நேற்றைய போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. சமபலத்துடன் மோதிய இருஅணிகளும் சரிக்கு சமமாக புள்ளிகளை குவித்தது. முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர் அணி 27க்கு 25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பங்கேற்று தேசிய கீதம் பாடி போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியின் போது அவர் செய்த ஒரு செயல், அனைவரிடையே பெரும் உற்சாகத்தையும், ஆரவாரத்தையும் ஏற்படுத்தியது.

அதாவது, கபடி வீரர் போல் தொடையை ஒரு கையால் தட்டி ரசிகர்களையும், வீரர்களையும் கோலி உற்சாகப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், உலக அளவில் கபடி போட்டியில் இந்திய அணி சிறந்து விளங்குகிறது.

புரோ கபடி தொடர் ஆரம்பித்தது முதல் கபடி போட்டியின் மீதான கவனம் அதிகமாகி உள்ளது. உலகளவில் கபடி போட்டி அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மாற இந்திய வீரர்களின் மனஉறுதியும், உடல்தகுதியுமே காரணம் என்றார்.

Story first published: Monday, July 29, 2019, 14:44 [IST]
Other articles published on Jul 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+