Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இதுவும் கடந்துப் போகும்”.. ஆக்ரோஷ மனிதனின் 33வது பிறந்தநாள்.. கோலிக்கு குவிந்து வரும் வாழ்த்துகள்!

அமீரகம்: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்தியாவின் 3வடிவ கிரிக்கெட் அணிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. தோனிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் நம்பிக்கையாக இவரை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

கோலி தற்போது கடினமான சூழல்களை எதிர்கொண்டு வந்தாலும், அவரின் பிறந்தநாளன்று வாழ்த்து மழை பொழிய ரசிகர்கள் மறக்கவில்லை.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

விராட் கோலி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 60 சதவீதத்திற்கும் மேல் வெற்றி சதவீதத்தை வைத்துள்ளார். இதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன் கோலிதான். அவர் தலைமையில் விளையாடிய 65 போட்டிகளில், இந்தியா 38 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 11 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. 16 தோல்விகள். இவ்வளவு புகழை பெற்றுள்ள கோலிக்கு இன்று ரசிகர்கள் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.

பிசிசிஐ வாழ்த்து

பிசிசிஐ வாழ்த்து

விராட் கோலிக்கு பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ, அவர் சிரித்தபடியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் கேப்டன் விராட் கோலி. இன்று இரவு வெற்றியை பரிசாக கொடுப்பாரா என்று குறிப்பிட்டுள்ளது. இதே போல ஆர்சிபி அணியும் வாழ்த்து கூறியுள்ளது.

நெகிழ்ச்சியடைந்த ஆர்சிபி

நெகிழ்ச்சியடைந்த ஆர்சிபி

இதுகுறித்து போடப்பட்டுள்ள பதிவில், ஆர்சிபி அணிக்காகவும், ரசிகர்களுக்காகவும், அணியினருக்காகவும் நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி கோலி. நீண்ட காலம் நலமுடன் வாழ் வேண்டும் கிங் கோலி என பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளது.

Recommended Video

India Team ட்ரெஸ்ஸிங் பெரிய ரூமில் குழப்பம் இருக்கு - முன்னாள் வீரர் சொன்ன தகவல்
சேவாக்கின் வாழ்த்து

சேவாக்கின் வாழ்த்து

இதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், கடினமான நேரங்கள் எப்போதும் நீடிக்காது. ஒரு தலைமுறையின் நாயகன் நீங்கள். இனி பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி என கூறியுள்ளார். இதே போல அஜிங்கியா ரகானேவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோலியின் பயணம்

கோலியின் பயணம்

கடந்த 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமான விராட் கோலி தற்போது வரை 23, 159 சர்வதேச ரன்களை குவித்துள்ளார். கடந்த 2011 மற்றும் 2013ம் ஆண்டு உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த முக்கிய வீரர் கோலி. இவருக்கு மைக்கேல் தமிழ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகள்.

Story first published: Friday, November 5, 2021, 17:01 [IST]
Other articles published on Nov 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+