Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யோ-யோ டெஸ்டில் கலக்கிய யுவராஜ் சிங்.. விடைபெறும் நாளை முடிவு செய்தார்!

பெங்களூர்: இந்திய அணியில் இடம்பெற செய்யப்படும் கஷ்டமான யோ யோ டெஸ்டில் யுவராஜ் சிங் கலந்து கொண்டு இருக்கிறார். இதில் மிகவும் சிறப்பாக செயலாற்றி அவர் தனது பிட்னஸை நிரூபித்து இருக்கிறார்.

மேலும் அவர் இது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதேபோல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான தோல்விகள் குறித்தும் பேசினார்.

அந்த வீடியோவில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அடையும் நாளை குறித்தும் பேசி இருக்கிறார். மேலும் உணர்ச்சிபூர்வமாக சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

கடுமையான யோ யோ டெஸ்ட்

கடுமையான யோ யோ டெஸ்ட்

யோ யோ தேர்வு என அழைக்கப்படும் பிட்னஸ் தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் ஆகும். இதில் சரியாக செயல்படுபவர்கள் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள். சில நாட்களுக்கு முன் அஸ்வின் இந்த தேர்வில் வெற்றி பெற்றார். அதேபோல் நெஹ்ராவும் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடுவதற்காக இந்த தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆனால் ரெய்னா இந்த தேர்வில் மோசமாக தோல்வி அடைந்தார்.

வெற்றி பெற்ற யுவராஜ் சிங்

வெற்றி பெற்ற யுவராஜ் சிங்

இந்த கடினமான யோ யோ டெஸ்டில் நேற்று யுவராஜ் சிங் கலந்து கொண்டார். அதில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் கொடுக்கப்பட்ட டாஸ்குகள் அனைத்தையும் சரியாக முடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் வெற்றிகரமாக யோ யோ டெஸ்டை முடித்தார். இதன் மூலம் அவர் தனது முழு உடல் தகுதியை நிரூபித்து உள்ளார்.

எப்போதும் தோல்விதான்

எப்போதும் தோல்விதான்

தற்போது அவர் இந்த டெஸ்ட் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் ''நான் எப்போதும் தோல்வி அடைந்து கொண்டே இருக்கிறேன். முதல் 17 வருடங்கள் தோல்வி அடைந்தேன். இதற்கு முன் இரண்டு முறை யோ யோ டெஸ்டில் தோல்வி அடைந்தேன். ஆனாலும் நான் விடாமல் முயற்சி செய்வேன் . அதனால்தான் இப்போது வெற்றி பெற்று இருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.

எப்போது ஓய்வு

எப்போது ஓய்வு

மேலும் அவர் தனது பேட்டியில் தான் ஓய்வு அடையும் நாள் குறித்தும் பேசியுள்ளார். அதில் "எனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது. இனி எந்த மாதிரியான கிரிக்கெட் போட்டியில் நான் விளையாடுவேன் என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒரு பார்மெட்டில் விளையாடுவேன். முடிந்தளவு பயிற்சி செய்வேன். ஆனால் கண்டிப்பாக 2019க்கு பின் ஓய்வு குறித்து அறிவித்துவிடுவேன். அதற்கு மேல் விளையாடுவது குறித்து சிந்திக்க மாட்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, December 5, 2017, 10:09 [IST]
Other articles published on Dec 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+