Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

60 விக்கெட்களையும் அள்ளிச் சாப்பிட்ட இந்திய பந்து வீச்சாளர்கள்..!

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய பந்து வீச்சாளர்கள் இன்னொரு புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளனர். அதாவது இலங்கையின் மொத்தம் உள்ள 60 விக்கெட்களையும் அள்ளியுள்ளனர். அதாவது 3 போட்டிகளிலும் அவர்கள் இலங்கையை ஆல் அவுட் செய்துள்ளனர்.

இப்படி ஒரு சாதனையை படைப்பது இந்தியாவுக்கு இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 88-89 தொடரி்ல் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்கள், நியூசிலாந்தின் 60 விக்கெட்களைக் காலி செய்திருந்தனர்.

தற்போது 2வது முறையாக இந்தியா இந்த சாதனையைச் செய்துள்ளது.

3 போட்டி - 12 இன்னிங்ஸ்

3 போட்டி - 12 இன்னிங்ஸ்

மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவும், இலங்கையும் மோதின. இதில் எந்த அணியும் பாலோ ஆன் வாங்கவில்லை. எனவே மொத்தம் 12 இன்னிங்ஸ்களும் (தலா 6) நடந்தன.

60 விக்கெட்கள்

60 விக்கெட்கள்

3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கையை இந்தியா ஆல் அவுட் ஆக்கியது. இதனால் இந்தியாவுக்கு 60 விக்கெட்கள் கிடைத்தன.

"முதல்வர்" அஸ்வின்

இந்த 60 விக்கெட்களில் அதிக விக்கெட்களை அள்ளியவர் அஸ்வின்தான். அவருக்கு மட்டும் 21 விக்கெட்கள் கிடைத்தன. அடுத்து அமீத் மிஸ்ரா 15 விக்கெட்களைச் சாய்த்தார். இஷாந்த் சர்மாவின் பங்கு 13 ஆகும்.

2வது முறையாக

2வது முறையாக

முன்பு 1988-89 தொடரில் இந்தியா, நியூசிலாந்தை இப்படி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 60 விக்கெட்களை வீழ்த்தியிருந்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் அந்த சாதனையைச் செய்துள்ளது.

11வது சம்பவம்

11வது சம்பவம்

சர்வதேச அளவில் இப்படி ஒரு அணி 60 விக்கெட்களைச் சாய்ப்பது 11வது நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது.

Story first published: Wednesday, September 2, 2015, 11:20 [IST]
Other articles published on Sep 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+