Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி சும்மா... டோணிதான் கேப்டன்... உண்மையை உடைக்கும் இந்திய வீரர் சாஹல்!

டெல்லி: இந்திய அணியில் தற்போது புதிய உதயம் ஆகியிருக்கும் சாஹல் கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானத்தில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதில் அணியின் கேப்டன் கோஹ்லி பற்றியும், டோணி பற்றியும் சுவாரசியமான பல விஷயங்களை பேசியுள்ளார். முக்கியமாக அவர்கள் அணியில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி வைரல் ஆகியுள்ளது.

இதில் இவர் "இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியாக இருந்தாலும், டோணிதான் ரியல் கேப்டனாக செயல்படுகிறார்" என தெரிவித்துள்ளார்.

 புதிய கேப்டன் கோஹ்லி

புதிய கேப்டன் கோஹ்லி

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் மிக முக்கியமான இடத்தில் இருந்தவர் டோணி. அனைத்து விதமான போட்டிகளிலும் சாம்பியன் கோப்பைகளை அள்ளியவர் டோணி. கேப்டனாக முழு பார்மில் இருந்த போதே தனது கேப்டன் பதவியை கோஹ்லிக்கு விட்டுக்கொடுத்தார். புதிய கேப்டனாக பொறுப்பேற்ற கோஹ்லி, அவரது ஆட்டத்தை போலவே கேப்டன்ஷிப்பையும் மிகவும் சிறப்பாகவே செய்து வருகிறார். தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வெற்றி, ஆஸ்திரேலிய தொடர், இலங்கை தொடர் அனைத்திலும் 'கெத்து' பர்பார்மன்ஸ் என மிக சிறப்பான தலைமைப்பன்பை வெளிப்படுத்துகிறார். முக்கியமாக இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என வந்த சில வருடங்களிலேயே இவர் பெயர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்திய வீரர் சாஹல் பேட்டி

இந்திய வீரர் சாஹல் பேட்டி

இந்த நிலையில் இந்திய கேப்டன் கோஹ்லி கண்டுடெடுத்த முத்துக்களில் ஒருவர்தான் சாஹல். வலது கை லெக் ஸ்பின் பவுலரான இவர் அணியில் சேர்ந்து சில நாட்களிலேயே மிகவும் பெரிய அளவில் உயர்ந்து இருக்கிறார். இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவரது பந்து வீச்சு அனைத்தும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய இவர் அங்கு சிறப்பாக ஆடி இந்திய அணியிலும் இடம் பிடித்தார் .

 எப்பவும் டோணிதான் கேப்டன்

எப்பவும் டோணிதான் கேப்டன்

இந்த நிலையில் இவர் இந்திய கேப்டன் கோஹ்லி குறித்தும், டோணி குறித்தும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் இந்திய அணியின் கேப்டனாக கோஹ்லி மிகவும் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளார். மேலும் "இந்திய அணியின் உண்மையான கேப்டனாக கோஹ்லி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் பல சமயங்களில் டோணி தான் அணியை வழிநடத்தி வருகிறார். அவருக்கு கீழே விளையாடுவது நல்ல அனுபவத்தை கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.

 கோஹ்லிக்கு எப்பவும் டோணிதான் வழிகாட்டி

கோஹ்லிக்கு எப்பவும் டோணிதான் வழிகாட்டி

டோணி எப்படி இந்திய அணியை இன்னமும் தனது கைக்குள் வைத்திருக்கிறார் என்பது குறித்து சாஹல் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அதில் "பொதுவாக கோஹ்லி பெரும்பாலான சமயங்களில் பீல்டிங் செய்ய சென்றுவிடுவார். அவரால் அடிக்கடி வந்து பவுலர்களுக்கு அறிவுரை கூற முடியாது. அந்த சமயங்களில் டோணி கோஹ்லியிடம் 'எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டு அவர் தனது ஸ்டைல் அறிவுரைகளை கூறுவார். பெரும்பாலான சமயங்களில் டோணிதான் என்னை வழிநடத்தி இருக்கிறார். புதிய பிளேயர்கள் அனைவரையும் டோணிதான் வழிநடத்துகிறார்'' என்றும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 22, 2017, 10:18 [IST]
Other articles published on Oct 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+