For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துண்டை போட்டு இடத்தை பிடித்த தினேஷ் கார்த்திக்.. முதல் டி20க்கான இந்திய அணி அறிவிப்பு

Recommended Video

முதல் டி20க்கான இந்திய அணி அறிவிப்பு- வீடியோ

பிரிஸ்பேன் : இந்திய அணி நவம்பர் 21 அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளது.

பிரிஸ்பேன் நகரில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 தொடரில் ஆடிய இந்திய அணியில் இருந்து மாற்றங்கள் செய்யப்பட்ட அணியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணி விளங்குகிறது.

கேப்டன் பதவி மாற்றம்

கேப்டன் பதவி மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வில் இருந்த கோலி தற்போது மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டன் பதவி ஏற்ற ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா தொடரில் துணை கேப்டனாக இருக்க, கோலி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். ரோஹித் சர்மாவுடன் வழக்கம் போல ஷிகர் தவான் துவக்கம் அளிப்பார்.

கே எல் ராகுலுக்கு இடமா?

கே எல் ராகுலுக்கு இடமா?

சமீப காலத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மற்ற இளம் வீரர்களை விட அதிக வாய்ப்புகள் பெற்றும் ராகுல் ரன் குவிக்கவில்லை. பேட்டிங்கும் தடுமாற்றமாகவே இருக்கிறது. இந்த நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விக்கெட் கீப்பிங் செய்யப் போவது யார்?

விக்கெட் கீப்பிங் செய்யப் போவது யார்?

ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே அணியில் இடம் பிடித்துள்ளனர். இதில் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பிங் வாய்ப்பை பெறுவார் என தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இதே போல ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் என குறிப்பிட்டு பின்னர் தினேஷ் கார்த்திக்கை கீப்பிங் செய்ய வைத்தனர். எப்படி பார்த்தாலும், தினேஷ் கார்த்திக் தன் இடத்தை பேட்ஸ்மேனாக தக்க வைத்துள்ளார்.

பந்துவீச்சு யார்? யார்?

பந்துவீச்சு யார்? யார்?

பந்துவீச்சில் க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் கலீல் அஹ்மது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அனுபவ உமேஷ் யாதவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதே சமயம், சமீபத்தில் அறிமுகமான புதிய வீரரான கலீல் அஹ்மது இடம் பிடித்துள்ளார்.

இவர்களுக்கு இடம் இல்லை

இவர்களுக்கு இடம் இல்லை

சாஹல் 12வது வீரராக இடம் பெற்றுள்ளார். இவருக்கு 11 வீரர்கள் அணியில் இடம் கிடைப்பது கடினமே. உமேஷ், சாஹல் தவிர மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் களமிறங்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி

முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட உள்ள 12 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி -

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா மற்றும் கலீல் அஹ்மது. 12வது வீரர் - சாஹல்.

Story first published: Wednesday, November 21, 2018, 9:27 [IST]
Other articles published on Nov 21, 2018
English summary
Indian squad announced for ist T20 against Australian team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X