Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முரளி விஜய், குல்தீப் யாதவ் நீக்கம்.. பிருத்வி ஷா, ஹனுமா விஹாரி சேர்ப்பு.. கடைசி 2 டெஸ்ட்டுக்கு!

Recommended Video

அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- வீடியோ

நாட்டிங்ஹாம் : இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியும்,மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்திய அணி தற்போது 1-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது.

Indian squad announced for remaining 2 tests


இந்திய அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களை மட்டுமே அறிவித்தது. இந்நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணி வீரர்களை இன்று அறிவித்தது. இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற முரளி விஜய் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பதிலாக பிருத்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

பிருத்வி ஷா தலைமையில் இந்திய u19 அணி சமீபத்தில் உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர்கள் இருவரும் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவது சற்றே கடினம்.

மீதமுள்ள இரண்டு போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி விவரம்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), தவான், ராகுல், புஜாரா, கருண் நாயர், பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷர்டுல் தாக்குர், பிருத்வி ஷா மற்றும் விஹாரி.






Story first published: Thursday, August 23, 2018, 11:31 [IST]
Other articles published on Aug 23, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+