Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் (அ) ஹனுமா.. சஸ்பென்ஸ் வைத்த பிசிசிஐ.. சரி, நம்ம அஸ்வின் உண்டா இல்லையா? #IndvAus

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் டிசம்பர் 6 முதல் துவங்க உள்ளது. அதற்கான இந்திய அணியில் யார் இடம் பெறுவார்கள் என பல ஊகங்கள் இருந்தது.

இந்த நிலையில் 12 வீரர்கள் கொண்ட உத்தேச இறுதிப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ப்ரித்வி ஷா அணியில் இல்லை

ப்ரித்வி ஷா அணியில் இல்லை

ப்ரித்வி ஷா காயம் காரணமாக முதல் டெஸ்டில் துவக்க வீரராக இடம் பெற மாட்டார் என்ற நிலையில், வேறு யார் இடம் பிடிப்பார்கள் என்ற குழப்பம் நிலவியது. ரோஹித் சர்மா துவக்க வீரராக இடம் பெறுவாரா? என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ராகுல், முரளி விஜய் உள்ளே

ராகுல், முரளி விஜய் உள்ளே

ஆனால், இந்த உத்தேச பட்டியலில் துவக்க வீரர்களாக முரளி விஜய், ராகுல் பெயர் இடம் பெற்று உள்ளது. இதில் ராகுல் நிலைத்து நின்று ஆடுவாரா? என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து ரன் குவிப்பதில்லை. பல போட்டிகளில் ரன் எடுக்க திணறுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ப்ரித்வி ஷா காயத்தை பயன்படுத்தி அணியில் இடம் பெற்றுவிட்டார் ராகுல்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்

அடுத்த பேட்டிங் வரிசையில் புஜாரா, கோலி, ரஹானே பெயர் இடம் பெற்றுள்ளது. இவர்கள் மூவரை தான் இந்தியா பேட்டிங்கில் வெகுவாக நம்பி உள்ளது. ரிஷப் பண்ட் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை தொடர்ந்து மீண்டும் விக்கெட் கீப்பராக அணியில் இடம் பிடித்துள்ளார்.

ரோஹித் - ஹனுமா இடையே போட்டி

ரோஹித் - ஹனுமா இடையே போட்டி

ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய ஹனுமா விஹாரி மற்றும் ரோஹித் சர்மா இருவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த 12 வீரர்கள் கொண்ட பட்டியலில் இவர்கள் இருவரில் ஒருவர் தான் முதல் டெஸ்டில் ஆடுவார்கள் என கூறப்படுகிறது. இதில் ஹனுமா விஹாரி பகுதி நேர பந்துவீச்சாளராக செயல்படுவார் என்பதும், ரோஹித் சர்வதேச அனுபவம் கொண்ட வீரர் என்பதையும் வைத்தே இருவரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்பது நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

ஒரு வேளை இப்படி நடந்தால்?

ஒரு வேளை இப்படி நடந்தால்?

ஒரு வேளை ராகுலை நீக்கிவிட்டு, ரோஹித்தை துவக்க வீரராக ஆட வைத்து, ஹனுமாவை ஆறாவது வீரராக ஆட வைக்கவும் சிறிய வாய்ப்புண்டு. இது போன்ற அதிரடி முடிவுகளை நாம் கோலியின் தலைமையில் இதுவரை பார்த்திராத நிலையில் இப்படி நடக்காது எண்டு நாம் ஊகிக்கலாம்.

வேகப் பந்துவீச்சில் யார்?

வேகப் பந்துவீச்சில் யார்?

வேகப் பந்துவீச்சில் ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா பெயர் இடம் பெற்றுள்ளது. புவனேஸ்வர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. உமேஷ் யாதவ்வுக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.

அஸ்வின் உண்டு

அஸ்வின் உண்டு

சுழற்பந்துவீச்சில் அஸ்வின் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். பயிற்சிப் போட்டியில் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும், சர்வதேச அளவில் தற்போது முன்னணி சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் அஸ்வின் ஜடேஜா, குல்தீப்பை பின் தள்ளி அணியில் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

12 வீரர்கள் கொண்ட இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.

Story first published: Wednesday, December 5, 2018, 11:35 [IST]
Other articles published on Dec 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+