Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித் மட்டுமல்ல.. ஒவ்வொரு U19 உலககோப்பையில் விளையாடி ஸ்டார் ஆன இந்திய வீரர்கள் பட்டியல்

மும்பை: அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பது எதிர்கால நட்சத்திரங்களை அடையாளம் காண நடத்தப்படும் ஒரு தொடராகும். இந்த தொடரில் விளையாடினாலே எதிர்காலத்தில் சீனியர் அணிகளுக்கு விளையாட ஒரு பாலமாக அமையும்.

இந்த தொடரில் விளையாடி பல நட்சத்திர வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறார்கள். இதில் முதன்மையான நபர் என்றால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர்களை சொல்லலாம்.மலேசியாவில் நடைபெற்ற 2008 அண்டர் 19 உலக கோப்பை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. அதில் களமிறங்கிய விராட் கோலி உலகப் புகழ்பெற்றார்.

Indian stars in U19 World cup

இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு அண்டர் 19 உலக கோப்பையில் விளையாடி பிற்காலத்தில் சாதித்த வீரர்கள் பற்றி தற்போது பார்க்கலாம். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய வீரர்கள் முகமது கையிப், சேவாக், லட்சுமி ரத்தன் சுக்லா, ஹர்பஜன் சிங், ரெட்டிந்தர் சிங் சோதி ஆகியோர் தேசிய அணியில் விளையாடினார்கள்.

2000 ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் கைஃப், வேணுகோபால் ராவ் ,அஜய் ராத்ரா, யுவராஜ் சிங், ரெட்டீந்திர் சிங் சோதி ஆகியோர் இந்திய தேசிய அணிக்கும் விளையாடினார்கள். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற U19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பார்த்தீவ் பட்டேல், இர்பான் பதான், ஸ்டூவர்ட் பின்னி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தேசிய அணியிலும் விளையாடினார்கள்.
இதில் நான்கு பேருமே தேசிய அணியில் பல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலககோப்பை போட்டியில் அம்பத்தி ராயுடு, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ஆர் பி சிங், விஆர்பி சிங், ராபின் உத்தப்பா ஆகியோர் தேசிய அணியில் விளையாடினார்கள். இதில் பெரும்பாலானோர் இந்திய அணியில் பல போட்டிகளில் விளையாடி தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற U19 உலக கோப்பையில் பியூஸ் சாவ்லா, புஜாரா, ரோகித் சர்மா, ஜடேஜா இசாந்த் சர்மா, சபாஷ் நதீம் ஆகியோர் விளையாடினார்கள்.

இதில் பெரும்பாலானோர் உச்சகட்ட புகழை எட்டினார்கள். 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற U19 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி, ஜடேஜா, சித்தார்த் கவுல், அபிநவ் முகுந்த், மனிஷ் பாண்டே, சௌரப் திவாரி, சிவ் குமார் ஆகியோர் இந்திய அணியில் விளையாடினார்கள். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற U19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சந்திப் சர்மா, ஹனுமா விகாரி, ஹர்மிட் சிங், ஸ்மித் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடினார்கள்.

இதில் ஹனுமா விகாரி ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் ஜொலித்தார். மற்ற மூவருக்கும் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற u19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆவேஷ் கான்,தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ்,சர்பராஸ் கான், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய தேசிய அணியில் விளையாடி இருக்கிறார்கள்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ப்ரித்விஷா, சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் சீனியர் அணியிலும் இடம் பிடித்தார்கள். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் துருவ் ஜூரல், ரவி பிஷ்னாய், ஜெய்ஸ்வால், திலக் வர்மா பிடித்து சாதித்தார்கள். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற U19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய எந்த இந்திய வீரர்களும் இதுவரை சீனியர் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்திய அணியில் யாரும் இடம்பெறவில்லை.

Story first published: Thursday, August 28, 2025, 15:55 [IST]
Other articles published on Aug 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+