For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கானிஸ்தான் அறிமுக டெஸ்ட்.... கோஹ்லி கிடையாது... ரஹானே கேப்டன்!

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

ஆப்கானிஸ்தான் போட்டியை மிஸ் செய்யும் இந்திய வீர்ரகள்!- வீடியோ

பெங்களூரு: டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிமுகமாகும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாடுவதால், விராட் கோஹ்லி விளையாடவில்லை. அஜங்யா ரஹானே கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட 10 நாடுகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ளன. அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.

Indian team for afghanistan test announced

ஆப்கானிஸ்தான் அணி, ஜூன் 14ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கவுன்டி அணிக்காக விளையாட செல்வதால், விராட் கோஹ்லி அணியில் இடம்பெறவில்லை.

அவருக்குப் பதிலாக அஜங்யா ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார். கருண் நாயர் மீண்டும் திரும்புகிறார். மனைவியால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி:

அஜங்யா ரஹானே (கேப்டன்), ஷிகார் தவான், முரளி விஜய், கேஎல் ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, கருண் நாயர், விருத்தமான் சாகா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹார்திக் பாண்டயா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர்.

Story first published: Tuesday, May 8, 2018, 18:20 [IST]
Other articles published on May 8, 2018
English summary
Indian team for the afghanistan test match has been announced.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+